நாங்கள் சாதுக்கள் அல்ல.. சீக்கிரம் முடிவு எடுங்கள்.. பாஜகவிற்கு கடைசி வாய்ப்பு அளித்த சிவசேனா!
பாஜகவின் செயலால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை வைக்க நேரும் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
மும்பை: பாஜகவின் செயலால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை வைக்க நேரும் நிலை உருவாகலாம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. இந்த நிலையில் சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. தேர்தலுக்கு முன் நாங்கள் போட்டு இருந்த 50/50 ஒப்பந்தத்தை பாஜக மதிக்க வேண்டும் என்று சிவசேனா கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது.
5 வருடங்களில் இரண்டரை வருடம் பாஜக முதல்வரும், இரண்டரை வரும் ஆதித்யா தாக்கரே முதல்வராகவும் இருப்பார் என்று சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது.

சந்தித்தனர்
இந்த நிலையில் பாஜக, சிவசேனா இரண்டு கட்சித் தலைவர்களும் இன்று மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர். இரண்டு கட்சியினரும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்தனர். ஆனால் இது தீபாவளி சந்திப்பு அரசியல் கிடையாது என்று இரண்டு தரப்பினரும் கூறினார்கள்.

பேட்டி
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், அரசியலில் யாரும் புனிதம் கிடையாது. இங்கு யாரும் சாத்துக்களாக இருக்க முடியாது. சிவசேனா கட்சி ஒரு அளவிற்கு மட்டுமே பொறுமையாக இருக்கும்.

கோரிக்கை ஏற்பு
பாஜக எங்கள் கோரிக்கை ஏற்று முதல்வர் பதவியை தர வேண்டும். கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் முடிவுக்காக காத்து இருப்போம் என்று கூறிவிட்டார். நாங்கள் இப்போது காத்து இருப்போம். ஆனால் சிவசேனா கட்சி இப்படி பொறுமையாக இருக்காது. நாங்கள் மாற்று வழிகளையும் ஆலோசிப்போம்.

செய்வோம்
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் இணைவது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. நாங்கள் அந்த குற்றத்தை செய்ய கூடாது என்று இருக்கிறோம். ஆனால் பாஜக அதற்கான அவசியத்தை உருவாக்கி வருகிறது. பாஜகவின் கையில்தான் எங்கள் முடிவு இருக்கிறது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications