மகாராஷ்டிரா பாஜக அரசில் குழப்பம்.. முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த சிவசேனா.. ஆட்சி கவிழும் ஆபத்து?
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது என்டிஏ அரசு நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு பாஜகவுக்கும் ஷிண்டே சிவசேனாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட்னாவிஸ் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிவசேனா அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் இப்போது பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் சூழலில், அங்கு என்டி அரசு ஆட்சியில் இருக்கிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் அங்குக் கூட்டணிக் கட்சிகளாக உள்ளன. இதற்கிடையே பீகாரில் என்டிஏ அரசில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குழப்பம்
அதாவது இன்று அங்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றார். இருப்பினும், சிவசேனா அமைச்சர்கள் சிலர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
சமீபத்தில் தான் நான்கு சிவசேனா முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள் ஆளும் பாஜகவில் இணைந்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஷிண்டே தரப்பினர் அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். அந்தச் சிவசேனா அமைச்சர்கள், தலைமைச் செயலக வளாகத்தில் இருந்தபோதிலும், அமைச்சரவைக் கூட்ட அரங்குக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
4 அமைச்சர்கள்
பின்னர், இந்த நான்கு அமைச்சர்களும் முதல்வர் பட்னாவிஸை தனிப்பட்ட முறையில் சந்தித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். அதிருப்தி அமைச்சர்களில் ஒருவரான பிரதாப் சர்நாயக் இது குறித்துக் கூறுகையில், "கூட்டணிக்கு என சில விதிகள் உள்ளன.. அவை பின்பற்றப்படவில்லை.. எங்கள் உறுப்பினர்களை பாஜக தங்கள் கட்சிக்குள் எடுத்துக்கொண்டது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இது குறித்து பட்னாவிஸை சந்தித்து எங்கள் அதிருப்தியைத் தெரிவித்தோம். அவர் எங்களுக்கு சப்போர்ட்டாகவே இருந்தார். இவை களத்தில் நடக்கும் தவறுகள். விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.
சமாளித்த பாஜக அமைச்சர்
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சில விஷயங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, அதேநேரம் சிவசேனா அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்ததாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்றனர். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்குத் தொண்டர்களை இழுக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். இது குறித்து சற்று கோபம் இருக்கலாம்
அதேநேரம் சிவசேனா அமைச்சர்கள் கேபினட் கூட்டத்தைப் புறக்கணித்ததாகச் சொல்வது சரியாக இருக்காது. உட்கட்சி தேர்தல் பணிகளில் அனைவரும் மும்முரமாக உள்ளனர். எட்டு பாஜக அமைச்சர்களும் கூட அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்காக அவர்கள் புறக்கணித்தார்கள் என சொல்ல முடியுமா?" என்றார். மகாராஷ்டிராவில் இப்போது முதற்கட்ட உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் டிசம்பர் 2ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் பாஜக- சிவசேனா இடையே மோதல் வெடித்துள்ளது.
ஷிண்டே அதிருப்தி?
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என ஷிண்டே எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருப்பினும், அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் பாஜக மீது அப்போது முதலே அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் என்சிபி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், பின்னர் பாஜகவில் இணைந்ததும் ஷிண்டேவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications