போனை எடுக்கவில்லை.. நெருங்கிய நண்பரை தூது அனுப்பிய சரத்.. அஜித்திற்கு மொத்த குடும்பமும் எதிர்ப்பு!
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு அவரின் குடும்பத்தினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பை: பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு அவரின் குடும்பத்தினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர், நல விரும்பிகள் அவரின் மனதை மாற்ற முயன்று வருகிறார்கள்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுவார்கள். அதற்கு நேற்றைய நாள் மிக சிறந்த உதாரணம். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவார்
இந்த நிலையில் நேற்றில் இருந்து அஜித் பவாரின் போன் சுவிட்ச் ஆபில் இருந்துள்ளது. இன்று காலை போனை ஆன் செய்தவர் எந்த போனையும் எடுக்கவில்லை. சரத் பவரின் குடும்பத்தில் இருந்து வந்த கால் எதையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறது.

மொத்தமாக குழப்பம்
மொத்தம் அஜித் பவார், சரத் பவார் குடும்பமே இதனால் குழப்பத்தில் உள்ளது. அஜித் பவார் மீண்டும் வர வேண்டும். அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அவர் மேலும் தவறான முடிவுகளை எடுக்க கூடாது என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

நெருங்கிய நண்பர்கள்
அவரின் நண்பர்கள் சிலரும் அஜித் பவாருக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் திலீப் வால்சே பாட்டீல் தற்போது அஜித் பவாரை சந்தித்துள்ளார். அவரின் வீட்டிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.

சமாதானம் தூதுவர்
சரத் பவார்தான் இவரை சமாதான தூதாக அனுப்பி இருப்பார் என்று கூறுகிறார்கள். அஜித் பவாருக்கு திலீப் வால்சே பாட்டீல் நெருங்கிய நண்பர். அதனால் அவரை வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது சமாதான முயற்சிகளை செய்து வருகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications