மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பதவி விலகியது இருக்கட்டும்.. அடுத்து என்ன செய்ய போகிறார் அஜித் பவார்?.. கவனமாக உற்றுநோக்கும் பாஜக!

அஜித் பவார் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பார், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக சேர்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக சேர்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அங்கு துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்து இருக்கிறார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் முதல்வர் பட்னாவிஸிடம் வழங்கி உள்ளார். அதேபோல் முதல்வர் பட்னாவிஸ் இன்னும் சற்று நேரத்தில் பதவி விலக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வருகிறது.

    அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் தொடங்கிய பரபரப்பு இன்னும் முடியவில்லை. சனிக்கிழமை அதிகாலை அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பவார் எப்படி

    அஜித் பவார் எப்படி

    இந்த நிலையில் அஜித் பவார் அடுத்து என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் பாஜகவுடன் இதேபோல் நட்பாக தொடர்வாரா. தேவேந்திர பட்னாவிஸ் உடன் இணக்கமாக இருப்பாரா, அவரின் ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அடுத்து என்ன நடவடிக்கை

    அடுத்து என்ன நடவடிக்கை

    அதே சமயம் அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் கட்சிக்குள் இணைந்து, அவர் தனது குடும்பத்துடன் பேசுவாரா. குடும்பத்துடன் மீண்டும் சமாதானமாக செல்வாரா என்று கேள்வி எழுந்து இருக்கிறது.

    சமாதான முயற்சி

    சமாதான முயற்சி

    கடந்த 3 நாட்களாக பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் அஜித் பவார் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று சரத் பவாரின் குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அஜித் பவார் மீண்டும் எங்களுடன் இணைந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அனைத்தையும் மறந்து சேர்த்துக் கொள்வதுதான் நல்லது என்று அவரின் குடும்பம் உறுப்பினர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    வாய்ப்பு உள்ளது

    வாய்ப்பு உள்ளது

    இதற்காக சரத் பவாரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் ஏற்கனவே அஜித் பவாரிடம் போன் செய்து பேசி இருக்கிறார்கள். இதனால் அஜித் பவாரின் அடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. இதை பாஜக கட்சியும் தீவிரமாக ஒரு பக்கம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Maharashtra: What will Ajit Pawar do next? Will he join hands with NCP again?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X