இரண்டரை வருடத்திற்கு பின் ஏமாற்ற கூடாது.. கூட்டணியில் முதலில் ஆளப்போவது யார்? மகா.வில் குழப்பம்!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளில் யார் முதலில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளில் யார் முதலில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் பிரச்சனை இன்றோடு முடிகிறது. அங்கு சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்று அந்த கட்சி கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும். இன்று மும்பையில் நடக்கும் கடைசி ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூன்று கட்சிகளும் சேர்ந்து அறிவிப்பை வெளியிடும்.

ஐந்து வருடம்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா ஐந்து வருடம் பதவியை அனுபவிக்க போவது கிடையாது. இரண்டரை வருடம் மட்டும்தான் அங்கு சிவசேனா முதல்வர் பதவியில் இருக்கும். இன்னும் இரண்டரை வருடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியில் இருக்கும். இதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி
அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வருடமும் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும். சிவசேனா சார்பாக ஆதித்யா தாக்கரேவிற்கு பதிலாக உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் சார்பாக சரத் பவார் முதல்வராக இருப்பார்.

ஒரு கேள்வி
ஆனால் இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் மகாராஷ்டிராவில் பதில் கிடைக்கவில்லை. இரண்டு பேரில் யார் முதலில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனை முதலில் முதல்வர் பொறுப்பை பெறுமா அல்லது தேசியவாத காங்கிரஸ் முதலில் முதல்வர் பொறுப்பை பெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு கட்சியும் ஆலோசித்து வருகிறது.

முதல் அதிகாரம்
இதில் சிவசேனா எங்களுக்குத்தான் முதலில் அதிகாரம் வேண்டும். நீங்கள் இரண்டரை வருடம் கழித்து ஆட்சி செய்யுங்கள் என்று கூறி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ள உள்ளது. ஆனாலும் சிவசேனா இரண்டரை வருடத்திற்கு பின் ஏமாற்ற கூடாது.

கூட்டணி வேண்டும்
இரண்டரை வருடத்திற்கு பின் பாஜகவுடன் சேர கூடாது. ஐந்து வருடமும் ஆட்சியில் இருக்க வேண்டும். ஐந்து வருடமும் கூட்டணியில் தொடர வேண்டும். ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிவசேனாவிற்கு அறிவுறுத்தி உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications