அஜித் பவாருக்கு மட்டுமே தெரியும்.. மகாராஷ்டிராவில் யாருக்கு யார் விரித்த வலை.. வல்லுனர்கள் கேள்வி!
நேற்று அதிகாலையில் இருந்து மகாராஷ்டிராவில் மொத்த அரசியல் திருப்பமும் யாருக்கு யார் விரித்த வலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை: நேற்று அதிகாலையில் இருந்து மகாராஷ்டிராவில் மொத்த அரசியல் திருப்பமும் யாருக்கு யார் விரித்த வலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கட்சி ஆட்சியை பொறுப்பை ஏற்று இருக்கிறது. சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன கலக்கம்
மகாராஷ்டிராவில் நடந்திருக்கும் இந்த அரசியல் திருப்பம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கதி கலங்க வைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எம்எல்ஏக்கள் எல்லோரும் இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாஜகவின் அடுத்த பிளான் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சூழ்ச்சி
இந்த நிலையில் இன்னொரு பக்கம் இது உண்மையில் தேசியவாத காங்கிரஸ் பாஜகவிற்கு விரித்த வலையா என்றும் அரசியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அஜித் பவாரை வைத்து மொத்தமாக பாஜகவை தேசியவாத காங்கிரஸ் ஏமாற்றுகிறதா? ஆட்சி அமைக்க வைத்து அசிங்கப்படுத்த திட்டமிடுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

என்ன கேள்வி
இந்திய அரசியல் கடந்த சில வருடங்களாக நடந்து வரும் சம்பவங்கள் இந்த சந்தேகத்தை அதிகரிக்கிறது. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அஜித் பவாரை வைத்து மொத்தமாக பாஜகவை சரத் பவார் ஏமாற்றுகிறாரா, இதெல்லாம் அரசியல் நாடகமாக என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பொறுப்பு
அதாவது அஜித் பவாரை அனுப்பி பாஜகவை ஆட்சி பொறுப்பேற்க வைத்து, பின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியை கவிழ்த்து, மக்கள் மடத்தியில் பாஜகவின் பிம்பத்தை உடைக்க, அவமானப்படுத்த தேசியவாத காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதனால் இந்த மொத்த அரசியல் திருப்பமும் யாருக்கு யார் விரித்த வலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
அரசியல் அனுபவம்
அதேபோல் சரத் பவார் 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவர். இவர் எடுக்கும் முடிவுகளை யாராலும் கணிக்க முடியாது என்பார்கள். அதனால் அவரின் மனதிற்குள் என்ன இருக்கும், இப்போது நடப்பதெல்லாம் அவரின் அரசியல் காய் நகர்த்தலா என்று போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications