சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!
சிவசேனா கட்சிக்கு நேற்று தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காதது ஏன் என்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
மும்பை: சிவசேனா கட்சிக்கு நேற்று தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காதது ஏன் என்று விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது, எங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று பாஜக கட்சி கூறிவிட்டது. சிவசேனா கட்சி ஆதரவு தரவில்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அதேபோல் சிவசேனாவும் அங்கு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மூன்றாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி ஒப்பந்தம்
ஆனால் கடைசி நேரம் வரை இந்த கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. சிவசேனா உடன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளாலும் கூட்டணி ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. இதனால் சிவசேனா கனவு கலைந்து போனது.

பகத் சிங்
இதனால்தான் சிவசேனா ஆளுநர் பகத் சிங்கிடம் கூடுதல் அவகாசம் கேட்டது. ஆனால் அவர் கூடுதலாக அவகாசம் கிடையாது என்று கூறிவிட்டார். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க வரும்படி அழைத்து இருக்கிறார்.

கடிதம்
நேற்று தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவிற்கு ஆதரவு கடித்த தரும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி, நாங்கள் யோசித்து கொண்டு இருக்கிறோம். சில உறுப்பினர்கள் கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். அதனால் எங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று கூறி இருக்கிறது.

ஆனால்
காங்கிரஸ் கட்சியும் இதேபோல்தான், எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் உள்ளது. ஆனால் தேசிய கட்சி தலைவர்கள் சிலருடன் பேச வேண்டும். நாளை ஆலோசனை செய்துதான் முடிவை எடுப்போம். உடனே அவசரமாக முடிவு எடுக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறிவிட்டது.

கூட்டணி வேண்டாம்
காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர்கள் சிலர் சிவசேனா உடன் கூட்டணி வேண்டாம் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதனால்தான் நேற்று சிவசேனா கட்சியால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதத்தை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications