பொய் கல்யாணம் செய்து பலாத்காரம் செய்த கயவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கொடூரன். பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை: கல்யாணம் செய்துக்கலாம் வா என்று கூட்டிப்போய், ஒப்புக்கு தாலி கட்டி விட்டு ஹோட்டலில் ரூம் போட்டு பலாத்காரம் செய்து விட்டு எதையும் வெளியில் சொல்லி விடாதே என்று எச்சரித்திருக்கிறான் ஒரு கயவன். மும்பை அருகே ஜோகேஸ்வரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இளம் பெண்ணை ஏமாற்றிய நபரின் பெயர் ராஜேஷ் படேல் என்பதாகும். 42 வயதாகும் அந்த நபர் ஜோகேஸ்வரியில் உள்ள பிரிண்டிங் பிரஸ்சில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே அச்சகத்திற்கு சென்றுள்ளான். அப்போதுதான் அந்த பெண்ணை பார்த்தான்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பார்க்க அழகாக லட்சணமாக இருந்த அவளை எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தான் ராஜேஷ். பல வழிகளிலும் முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த பெண்ணும் பிடி கொடுக்கவில்லை.

போலி திருமணம்
தாலி கட்டினால்தான் மத்தது எல்லாமே என்று அந்த பெண் பிடிவாதமாக கூறவே, போலியாக திருமணம் செய்து கொள்ள நினைத்தான். யாருக்கும் தெரியாமல் தாலி கட்டிக்கொண்டு ஜோலியை முடித்து விடலாம் என்று திட்டம் போட்டான் ராஜேஷ்.

நாள் குறித்த ராஜேஷ்
இதற்காக திட்டம் போட்ட ராஜேஷ், விடுமுறை நாளில் வேலை இருப்பதாக கூறி வீட்டில் பொய் சொல்லி வரச்சொன்னான். அந்தப் பெண்ணும் அப்படியே சொல்லி விட்டு ராஜேஷ் உடன் பைக்கில் ஏறி சென்றாள். வண்டி நேராக தானேவில் உள்ள வஜ்ரேஸ்வரி கோவிலுக்கு சென்றது. அங்கே அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான். நமக்கும் திருமணமாகி விட்டது என்று ஆனந்த கண்ணீர் விட்டாள் அந்தப் பெண்.

ஹோட்டல் ரூமில் சாந்தி முகூர்த்தம்
திருமணம் முடிந்த உடன் திட்டமிட்டது போலவே ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச்சென்றான். அங்கே அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டான். திருமணம் முடிந்த பின்னர் பெற்றோர் வீட்டில் நடைபெற வேண்டிய சாந்தி முகூர்த்தம் ஹோட்டல் ரூமில் நடந்தைக் கண்டு அழுதாள். அதன் பின்னர்தான் ராஜேசின் சுயரூபம் தெரிந்தது. எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்று கூறினான்.

அழுது துடித்த அந்த பெண்
ராஜேசில் நடவடிக்கை திடீர் மாற்றம் ஏற்பட்டதை பார்த்தாள். தான் ஏமாற்றப்பட்டதை அப்போதுதான் உணர்ந்த அந்த பெண், வீட்டிற்குப் போன உடன் நேராக தனது அப்பாவிடம் போய் நடந்ததை கூறினாள். தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் கூறி அழுதாள்.

ராஜேஷ் கைது
அந்தப் பெண்ணின் பெற்றோர் நேராக போலீசில் புகார் கூறினர். மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி விட்டதாகவும் ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications