குடியரசு துணைத் தலைவர்.. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா.. சரத் பவார் அறிவிப்பு!
மும்பை: எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள்
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகதீன் தன்கர் அறிவிப்பு
இதனிடையே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதனைத்தொடர்ந்து மேற்கு மாநில ஆளுநரான ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் கடும் மோதல் போக்கினை கடைப்பிடித்து வந்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை
இருந்தும் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வீட்டில் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வெற்றி, தோல்வியை கடந்து எதிர்க்கட்சிகளிள் ஒருங்கிணைவது அவசியம் என்றும், பாஜகவுக்கு போட்டியளிக்க வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

மார்கரெட் ஆல்வா அறிவிப்பு
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி, நரசிம்மா ராவ் ஆகியோர் அமைச்சரவையில் பணியாற்றிவர் மார்கரெட் ஆல்வா. குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியளிக்கும் வகையில் பெண் வேட்பாளரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது.

யாருக்கு வெற்றிவாய்ப்பு?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications