"மசாஜ்" வெப்சைட்டில் திடீர்னு மனைவி.. வெலவெலத்த கணவர்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்.. அங்கே இன்னொரு ஷாக்
மசாஜ் வெப்சைட்களில் மனைவி போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டார் இளைஞர்
மும்பை: மசாஜ் வெப்சைட்டில் தன்னுடைய மனைவி போட்டோ இருப்பதை பார்த்து அலறிவிட்டார் அந்த இளைஞர்.. அதைவிட இன்னொரு ஷாக்கும் அவருக்கு அங்கே காத்திருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கார் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 31 வயதாகிறது.. இவர் ஒருநாள், மசாஜ் சேவைகள் குறித்து செல்போனில் பார்த்து கொண்டிருந்தார்.
மசாஜ் சேவைகள் எப்படி இருக்கின்றன என்று அந்த இணையதள பக்கங்களை ஜாலியாக பார்த்து கொண்டிருந்தார்... அப்போது மசாஜ் செய்யும் பெண்களின் போட்டோக்கள், ஒரு வெப்சைட்டில் கிடைத்தது.

வெப்சைட்
அந்த போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு வந்தபோது, திடீரென அதில் தன்னுடைய மனைவி போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.. மனைவி மட்டுமல்ல, இளைஞரின் தங்கையின் போட்டோவும் அதில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த வெப்சைட் நிறுவனத்தை இளைஞர் தொடர்பு கொண்டார்.. ஆனால், மனைவி, தங்கையை பற்றி எதுவுமே கேட்காமல், தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று சொன்னார்.. எதிர்முனையில் பேசிய பெண்ணும், கார் நகரில் உள்ள ஹோட்டலில் வந்து தன்னை சந்திக்குமாறு சொன்னார்.

உஷார் உஷார்
இதனிடையே போலீசுக்கு சென்ற இளைஞர் விஷயத்தை சொன்னார். அவர்களையும் தன்னுடன் அழைத்து கொண்டு, சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலுக்கு போலீசாருடன் ஓடினார்.. பின்னர், இணையதளத்தில் இருந்த சகோதரி, மனைவியின் புகைப்படங்கள் குறித்து அந்த பெண்ணிடம் கேட்டார்.. ஆனால், குறிப்பிட்ட இருவரின் போட்டோக்களை பற்றி கேள்வி கேட்கவும், அந்த பெண் உஷாரானார்.. அதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல், அங்கிருந்து தப்பிக்க முயன்றார்..

மசாஜ் மசாஜ்
ஆனால், அதற்குள் போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.. இறுதியில், போலீஸ் அதிகாரிகள் இதை பற்றி சொல்லும்போது, "அந்த வெப்சைட்டின் பெயர் எஸ்கார்ட்.. இந்த வெப்சைட் மூலம் மசாஜ் செய்து கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது... இதற்காக அழகிய பெண்களின் போட்டோக்களை, அந்த வெப்சைட்களில் அப்லோடு செய்துள்ளனர்.. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட இளைஞரின் சகோதரியும், மனைவியும், அவர்களது ஃபேஸ்புக், ட்விட்டர்களில், போட்டோக்களை பதிவிட்டுள்ளார்கள்.

அக்கவுண்ட்
சொந்த பேஸ்புக் அக்கவுண்ட்டில் அவர்கள் போட்டோ போட்டிருந்தாலும்கூட, சோஷியல் மீடியாவில் இவைகள் உள்ளதால், அந்த போட்டோக்களை எடுத்து, எஸ்கார்ட் வெப்சைட்களில் பதிவேற்றி உள்ளனர்.. அதை பார்த்துதான், இளைஞர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தந்தார்.. குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா யாதவ்.. அவரை கைது செய்துள்ளோம்.. சோஷியல் மீடியாவில் உள்ள அழகான பெண்களின் போட்டோக்களை தேடிப்பிடித்து, எஸ்கார்ட் மற்றும் மசாஜ் வலைத்தளங்களில் அப்லோடு செய்பவர் இந்த ரேஷ்மாதான் என்பது உறுதியாக உள்ளது..

ஆபாச வெப்சைட்
இவருக்கு பின்னால் ஒரு பெரிய கும்பலே இருக்கிறது.. அவர்களையும் விசாரித்து வருகிறோம்.. சமூக ஊடகங்களில் தங்கள் போட்டோக்களை பதிவேற்றும்போது, பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று அட்வைஸ் தந்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.. மேலும், எஸ்கார்ட் வெப்சைட்டின் பின்னணியில் உள்ளவர்களையும் விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications