“சர்பிரைஸ்” ஷமி.. இமாலய சிக்ஸர்கள்! டெஸ்டா? டி20 யா? ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி காட்டிய இந்திய பவுலர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரிகளை விளாசி இந்தியா ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார்.
மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி பேட்ஸ்மேனாக மாறி 10 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அடுத்தடுத்த சிக்சர், பவுண்டரிகளை விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு ரன் சேர்ந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த வியாழன் அன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்கியது.

புகழ்பெற்ற டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எந்த அளவுக்கு முக்கியமான தொடராக உள்ளதோ, அதே போன்று இந்த தொடரும் பார்க்கப்படுகிறது. இதில் இரு நாட்டு வீரர்களும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தொடரில் பங்கேற்று உள்ளனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியா இந்த தொடரில் வென்றால் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும். இந்த நிலையில் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு ஷாக்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை ஒரு ரன் எடுத்த நிலையில் அவர் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் முஹம்மது ஷமியின் பந்து வீச்சில் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. அடுத்து லபுஷேனுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்த நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார்.

ஜடேஜா அசத்தல்
இறுதியில் ரவீந்திர ஜடேஜா , இருவரையும் வீழ்த்தி அசத்தினார். அடுத்து ரென்ஷா, ஹேண்ட்ஸ்கூம்ப், மர்பி ஆகியொரும் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மறுபக்கம் தமிழ்நாடு வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், போலேண்ட் ஆகியோர் ஆட்டமிழக்க இறுதியாக 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது ஆஸ்திரேலிய அணி.

ரோகித் ஷர்மா அதிரடி
இதனை அடுத்து விளையாட தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 120 ரன்களை குவித்து அசத்தினார். மறுமுனையில் நின்ற கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பரத் ஆகியோர் சொற்ப ரன்களுக்குள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து செல்ல இந்திய அணியும் தடுமாறியது.

ஜடேஜா - அக்சர் அசத்தல்
ஆனால், ரவீந்திர ஜடேஜா - அக்ஷர் பட்டேல் நிலைத்து நின்று ஆடி இந்தியாவுக்கு அசத்தலான ஆட்டத்தை கொடுத்தனர். ஜடேஜா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த அக்ஷர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்த முஹம்மது ஷமி இது டெஸ்ட் போட்டியா, டி20 யா என்று கேட்கும் அளவுக்கு பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டார்.

வாணவேடிக்கை காட்டிய ஷமி
முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி 7 விக்கெட்டுகளை எடுத்த மர்பியின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 இமாலய சிக்சர்களை விளாசி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தார் முஹம்மது ஷமி. 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் மர்பியின் ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார். பந்துவீச்சாளரான முஹம்மது ஷமியின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் பேக்கேஜாக அமைந்தது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications