பற்ற வைத்த தாக்கரே.. "மசூதிகளுக்கு வெளியே ஹனுமன் கீர்த்தனைகள்.. போராட்டம் தொடரும்".. பரபர மகாராஷ்டிரா

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றும்வரை போராட்டம் தொடரும் என்றார் ராஜ்தாக்கரே

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், அதுவரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ்தாக்கரே திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

ஹிஜாப் விவகாரம், ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து, மசூதிகளில் ஒலிபெருக்கி விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2-ம்தேதி நடந்த குடிபட்வா பொது கூட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது, மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும், மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில், அதன் அருகே நவநிர்மாண் சேனாவினர் ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்களை ஒலிப்பார்கள் என்றும் அறிவித்திருந்தார்..

ஒலிபெருக்கி

ஒலிபெருக்கி

இதையடுத்து சில நவநிர்மாண் சேனாவினர் பொது இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்த சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறின.. எனினும், மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை மே 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ராஜ்தாக்கரே கேட்டுக் கொண்டிருந்தார்.. பிறகு, அந்த காலக்கெடுவை நேற்றுவரை நீட்டித்தும் இருந்தார்.

மசூதிகள்

மசூதிகள்

அதுமட்டுமல்ல, அவுரங்காபாத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இரு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வார்கள். மேலும் ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் 4-ம் தேதி (நேற்று) முதல் நடைபெறும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல" என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 விதிமுறைகள்

விதிமுறைகள்

இந்நிலையில், சுப்ரீம்கோர்ட் விதிமுறைகளை மீறி சில மசூதிகளில் ஆசான் ஒலிக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து ராஜ் தாக்கரே கட்சியினர் ஒலி பெருக்கிகளில் ஹனுமன் கீர்த்தனைகளை இசைத்ததாகவும் தகவல் ஒன்று, வெளியானது... இதையடுத்து, மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.. இதையடுத்து, செய்தியாளர்களிடம் ராஜ் தாக்கரே பேசும்போது சொன்னதாவது:

 135 மசூதிகள்

135 மசூதிகள்

"எங்கள் தொண்டர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ரிப்போர்ட் எனக்கு கிடைத்துவிட்டது.. நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்தனர்... நாங்கள் அமைதியாக இருக்கவே விரும்புகிறோம்... ஆனால், இன்னைக்கு சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல்களை மீறிய அந்த 135 மசூதிகள் மீது மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எங்கள் தொண்டர்கள் மீது மட்டுமே ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள்? மசூதிகளில் ஆசான் ஒலித்தால், ஒலி பெருக்கி மூலம் ஹனுமன் கீா்த்தனைகளை இந்துக்கள் இசைக்க வேண்டும்..

 ஒலிபெருக்கிகள்

ஒலிபெருக்கிகள்

மசூதிகளில் மட்டுமல்ல, பல கோயில்களிலும் சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகள் இயக்கப்படுகின்றன... இந்த இயக்கம் சட்டவிரோத ஒலி பெருக்கிகளுக்கு எதிரானது... இதை எப்படி மதப் பிரச்சினை என்கிறார்கள்? மசூதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோத ஒலி பெருக்கிகளும் அகற்றப்பட வேண்டும்.. அதுவரை நாங்கள் எங்கள் போராட்டங்களை தொடருவோம்... அதுவரை ஆசான் நேரத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமன் கீர்த்தனைகளை இசைப்போம்..." என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+