ஒரே நாளில் ரூ.73470 கோடி இழப்பு! ஆட்டம் கண்ட முகேஷ் அம்பானி
மும்பை: ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஒரே நாளில் ரூ.73470 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
உலகமே வியக்கும்படி முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் கடந்த வாரம் 12 ஆம் தேதி தடபுடலாக நடைபெற்றது. அதற்குப் பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் வரை வந்து குவிந்தனர். தமிழ்நாட்டிலிருந்து ரஜினிகாந்த் உட்பட பலர் சென்று கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணத்திற்காக 5 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இது அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5%தான். அப்படிப் பார்த்தால், இந்தக் கல்யாணத்திற்கு அவர் ஏதோ கொஞ்சம் பணத்தைக் கிள்ளி போட்டுள்ளார் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதனால் வெறுப்படைந்து போன ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறினர். சமூக வலைத்தளங்களில் ஆனந்த அம்பானியின் திருமண செலவை ஈடுசெய்ய எங்களின் கட்டணத்தை உயர்த்துவதா? என்று பல விமர்சனங்கள் எழுந்தன.
அப்படி இருந்தாலும், ஒரே வாரத்தில் அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததாக சில நாட்கள் முன்னதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே நாளில் ரூ.73470 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பீட்டின்படி இந்தியாவின் மதிப்புமிக்க ஒரு நிறுவனமாகும்.
ஃபோர்ப்ஸ் தகவல்படி, இவர் ரூ.976320 கோடி (ஜூலை 22 நிலவரப்படி) சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்று அடையாளம் காணப்படுகிறார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிறுவன எண்ணெய், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி இந்நிறுவனத்தின், சந்தை மதிப்பீடு ரூ.73,470.59 கோடி சரிந்து, ரூ.20,30,488.32 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டு வரையிலான நிகர லாபத்தில் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டதை அடுத்து ரிலையன்ஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. ஆகவே இந்தளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ப்ளூ-சிப் ஸ்டாக் 3.49 சதவீதம் சரிந்து பிஎஸ்இயில் ரூ.3,001.10 ஆகக் காணப்பட்டது. பகல் நேரப்படி, இது 3.56 சதவீதம் குறைந்து ரூ.2,998.80 ஆக இருந்தது. என்எஸ்இயில், இது 3.41 சதவீதம் குறைந்து ரூ.3,004 ஆக இருந்தது. வர்த்தக அளவுகோல் அடிப்படையில், நிறுவனத்தின் 1.90 லட்சம் பங்குகள் பிஎஸ்இயிலும், 98.37 லட்சம் பங்குகள் என்எஸ்இயிலும் வர்த்தகம் செய்யப்பட்டன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடும் விற்பனை அழுத்தமானது பெஞ்ச்மார்க் குறியீடுகளைக் கீழே இழுத்துச் சென்றது. ஆகவே தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுவனத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து. 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 102.57 புள்ளிகள் அல்லது 0.13 சதவீதம் சரிந்து 80,502.08 இல் நிலைத்து நின்றது. என்எஸ்இ நிஃப்டி 21.65 புள்ளிகள் அல்லது 0.09 சதவீதம் சரிந்து 24,509.25 ஆக இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெள்ளியன்று அதன் ஜூன் காலாண்டின் நிகர லாபத்தில் 5 சதவீதம் சரிவை அறிவித்தது. இந்தக் குழுமத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.15,138 கோடி அல்லது ஒரு பங்கின் விலை ரூ.22.37 ஆக உள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ.16,011 கோடியுடன் ஒப்பிடும்போது, அதாவது ஒரு பங்கின் விலை ஒரு நிறுவனத்தின் அறிக்கையின்படி ஒரு ஆண்டுக்கு முன்பாக ரூ.23.66 ஆக இருந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications