கொரோனாவை விரட்ட நம்பிக்கை அளிக்கும் பெவிபிராவிர் மருந்து.. சோதிக்க தயாராகும் இந்திய நிறுவனம்
மும்பை: ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள பெவிபிராவிர் மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க மும்பை நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. விரைவில் மும்பையில் இந்த மருந்தை பரிசோதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சுமார் 1.9 லட்சம் பேரை கொன்றுவிட்ட கொரோனா வைரஸ் இன்னும் பல்லாயிரம் பேரை வேட்டையாட துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் ஆகும்.
கடந்த டிசம்பர் மாதம் உருவான் கோவிட் 19 என்று அழைக்கப்படும் இந்த கொரோனா வைரஸ்க்கு உலகில் இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை.

தடுப்பு மருந்துகள்
எனினும் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, கனடா, இங்கிலாந்து என உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாவுக்கு மருத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. தற்போதைய நிலையில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அல்லது பெவிபிராவிர், ரெம்டிசிவிர், லோபினாவிர் போன்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை வைத்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

எதிர்பார்த்த பலன் இல்லை
இதில் பல நாடுகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றும் மக்களை எதிர்பார்த்த அளவு குணப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவி உள்ளிட்ட நாடுகளில் ஆய்வுகள் சொல்கின்றன. அதே சமயம் ஜப்பான் நிறுவனம் தயாரித்த பெவிபிராவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜப்பான் சீனா அங்கீகாரம்
ஜப்பான் அரசு சளி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு பெவிபிராவிர் மருந்துக்கு அனுமதி வழங்கி இருந்தது. அந்த மருந்துதன் எபோலோ வைரஸ் நோய்க்கு பயன்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதேபோல் கொரோனாவுக்கு எதிராக பெவிபிராவிர் மருந்து சிறப்பாக செயல்படுவதாக ஜப்பான்,சீனா நாடுகள் அங்கீகரித்தன. இந்த மருந்து நுரையீரல் செயலிழப்பை சீராக்கி விரைவில் குணப்படுத்துவதாக சீன மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மும்பை நிறுவனம் தீவிரம்
இந்நிலையில் பெவிபிராவிரை இந்தியாவில் பரிசோதிக்க மும்பையை சேர்ந்த கிளென்மார்க் என்ற மருந்து நிறுவனம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக கிளென்மார்க் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications