Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வா.. வா.. " மைனர் சிறுமியை பார்த்து இதை சொன்னாலும் பாலியல் அத்துமீறல் தான்! மும்பை கோர்ட் அதிரடி

மைனர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் ஐகோர்ட் முக்கிய கருத்தை கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மைனர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே மைனர் சிறுமியைப் பார்த்து "வா.. வா.." என்று திரும்பத் திரும்பச் சொல்வதும் பாலியல் துன்புறுத்தல் தான் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் உயர்ந்தே வருகிறது.

மைனர் சிறுமிகளை பாலியல் குற்றங்களில் இருந்து காக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மேலும், பாலியல் அத்துமீறல்கள் நடந்தால் பெற்றோரிடம் துணிச்சலாகச் சொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மைனர் குழந்தைகள்

மைனர் குழந்தைகள்

மைனர் குழந்தைகள் தைரியமாக வெளியே செல்ல மாட்டார்கள் என்பதாலேயே இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கிறது. மைனர் சிறுமிகள் புகார் சொன்னால் அவர்களின் அடையாளம் முற்றிலும் ரகசியமாகவே வைக்கப்படும். மேலும், அவர்கள் எதாவது பிரச்சினைகளை எதிர்கொண்டால் 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்படி மத்திய, மாநில அரசுகள் மைனர்கள் மீதான குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 மும்பை கோர்ட்

மும்பை கோர்ட்

இதனிடையே மைனர் பாலியல் அத்துமீறல் வழக்கு ஒன்றில் மும்பை கோர்ட் முக்கிய கருத்தைக் கூறியுள்ளது. அதாவது மைனர் சிறுமியைப் பின்தொடர்ந்து.. அவருக்கு சொந்தரவு செய்யும் வகையில் "வா.. வா.." என்று திரும்பத் திரும்பச் சொல்வதும் கூட பாலியல் துன்புறுத்தல் தான் என்று மும்பை திண்டோஷியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 32 வயது இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துமீறல்

அத்துமீறல்

இந்தச் சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்தது.. பாதிக்கப்பட்ட அந்த 15 வயது சிறுமி அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவி பிரெஞ்சு வகுப்பிற்குச் சென்றுள்ளார். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இளைஞர், பைக்கில் அந்த சிறுமியைப் பின்தொடர்ந்துள்ளார். மேலும், அந்த சிறுமியைப் பார்த்துத் தொடர்ந்து "வா.. வா.. போகலாம்" என்று கூறி தொல்லை செய்துள்ளார். இதேபோல தொடர்ச்சியாகப் பல நாட்கள் நடந்துள்ளது.

புகார்

புகார்

முதலில் அந்த சிறுமி தெருவில் இருந்த ஆண்களிடம் உதவி கேட்டுள்ளார்.. அவர்கள் பிடிப்பதற்குள் குற்றவாளி பைக்கில் ஓடிவிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடரவே இந்தச் சம்பவம் குறித்து அந்த சிறுமி டியூஷன் ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும், பைக்கில் டார்ச்சர் செய்யும் அந்த நபர், பக்கத்துக் கட்டிடத்தில் இரவு காவலாளியாக வேலை பார்ப்பதும் அந்த சிறுமிக்குத் தெரிய வந்துள்ளது. இதை அவர் தனது தாயாரிடம் கூற.. அவர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

தீர்ப்பு

தீர்ப்பு

போலீசார் அந்த நபரைக் கடந்த 2015 செப். மாதம் கைது செய்தனர். அந்த நபர் தனக்கு மனைவி மற்றும் மூன்று வயதுக் குழந்தை இருப்பதாகவும், தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இருப்பினும், அந்த சிறுமியின் வாக்குமூலமும், குற்றவாளியின் வாக்குமூலம் இந்தச் சம்பவம் நடந்ததை உறுதி செய்வதாகவே உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுவிக்க எந்தவொரு காரணமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அவரை குற்றவாளி என்று அறிவித்தனர்.

தண்டனை

தண்டனை

பெண்ணை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்த அந்த நபருக்கு 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இருப்பினும், அந்த நபர் கடந்த 2015 செப். மாதம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 2016 மார்ச் மாதம் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அப்போது அவர் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்ததால்.. இப்போது அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போதிலும், சிறையில் இருக்கத் தேவையில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+