போலீஸ் பாதி.. டான்சர் மீதி! இன்ஸ்டாவை கலக்கும் “டான்சிங் காப்”! ரன்வீர் சிங், ஃபரா கானுடன் மாஸ்
மும்பை: பல்வேறு தரப்பினர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விட்டு பிரபலமாகி வரும் நிலையில் மும்பையை சேர்ந்த அமோல் காம்ப்ளே என்ற போலீசும் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வெளியிட்டு பேமஸ் ஆகி இருக்கிறார்.
போலீஸ் என்றால் ஹரி இயக்கும் படங்களில் வரும் சிங்கம் சூர்யாபோல், சாமி விக்ரம்போல் கட்டுக்கோப்பான உடம்புடன், கடுகடுத்த முகத்துடன், விரைப்பாக நடப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. மருதமலை படத்தில் வரும் வடிவேலுவை போன்ற சிரிப்பு போலீஸ் நிஜத்திலும் உள்ளார்கள். அதற்கு உதாரணம்தான் அமோல் காம்ப்ளே.

மும்பை காவல்துறையில் ஹவில்தாராக பணிபுரிந்து வரும் அமோல் காம்ப்ளே போலீசாராக இருந்தாலும், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாக இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தான் நடனமாடும் வீடியோக்களையும், நகைச்சுவை வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஒரு போலீஸ் இப்படி ஜாலியாக டான்ஸ் ஆடி வீடியோ போடுகிறாரே என்ற ஆர்வத்தில் ஏராளமான மக்கள் அவரது சமூக வலைதள பக்கங்களை பின் தொடர தொடங்கினர். இதன் மூலம் அதிக பார்வையாளர்களை அவரது வீடியோக்கள் பெறவே நாளடைவில் அமோல் காம்ப்ளே மிகவும் பிரபலமடையத் தொடங்கினார். போலீஸ் அமோல் காம்ப்ளே என்று சொல்வது மறைந்து டான்சர் அமோல் காம்ப்ளே என்று அவர் அழைக்கப்பட்டார்.
போலீஸ் சீருடை அணிந்தபடியே இவர் பல வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இதனால் சாதாரண மக்கள் மட்டுமின்றி சினிமா, விளையாட்டு பிரபலங்களும் இவரது ஜாலியான வீடியோக்களை ரசிக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரன்வீர் சிங் போன்றோருடன் இணைந்து இவர் நடனமாடும் அளவுக்கு புகழ்பெற்று இருக்கிறார்.
அமோல் காம்ப்ளேவுக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். ஆனால், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக கிடைத்த போலீஸ் வேலைக்கு இவர் சென்றார். காவல்துறையில் சேர்ந்தவுடன் பணிச்சூழல், நேரமின்மையின் காரணமாக நடனமாடுவதைவே இவர் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இப்படியே இவரது வாழ்க்கை சென்றுகொண்டிருக்க, இவருக்கு வரப்பிரசாதமாக சமூக வலைதளங்கள் கிடைத்தன.
சமூக வலைதளங்களில் பலரும் டான்ஸ் ஆடி பிரபலமானதை கவனித்த இவர், தாமும் அவ்வாறு செய்ய விரும்பினார். போலீஸ் வேலையால் நிறுத்திய நடனத்தை, சமூக வலைதளங்களில் தொடர முடிவெடுத்தார். அமோல் காம்ப்ளேவின் மூத்த சகோதர் நடன பயிற்சியாளராக இருந்து வருகிறார். எனவே அவரது உதவியுடன் நடன பயிற்சி பெற்று டிக் டாக் தடைக்கு முன்பாக அதில் வீடியோக்களை வெளியிட்டு 1 லட்சம் ஃபாலோயர்களை பெற்றார் அமோல்.
டிக் டாக் தடை செய்யப்பட்டதால் இன்ஸ்டாகிராமுக்கு தாவிய அமோல், அதில் ரீல்ஸ் செய்து வெளியிடத் தொடங்கினார். அதிலும் அவருக்கு ஆதரவு பெருகியது. தற்போது இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கு 69 ஆயிரம் ஃபாலோயர்களை பெற்று உள்ளார் அமோல். அமோல் காம்ப்ளே தனது பணி நேரத்தில் தனக்கும் இருக்கும் டான்சரை ஓரம் வைத்துவிடுவாராம். பணி முடிந்த பிறகே தனக்குள் உள்ள போலீசை ஓரம்கட்டிவிட்டு ஆடுவாராம்.
அவர் வெளியிடும் வீடியோக்கள் மக்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைப்பதால் பலரும் அவரை பின்பற்றி வருகிறார்கள். நடிகர் ரன்வீர் சிங்குடன் இவர் எடுத்த வீடியோ இவருக்கும் மேலும் புகழையும், ஃபாலோயர்களையும் பெற்றுக்கொடுத்தது. ரன்வீர் சிங் மட்டுமின்றி ஃபரா கான், நகைச்சுவை கலைஞர் பார்தி சிங் உள்ளிட்டோருடனும் இவர் அமோல் காம்ப்ளே வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications