Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாராவியில் முடிகிறது...ஏன் மற்ற இடங்களில் முடியவில்லை...ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வைரஸ் ஷட் அவுட் என்ற ஒரு அட்டையை ஐடி கார்டு போல் மாட்டிக் கொண்டால் கொரோனா வைரஸை அண்டவிடாது என ஒரு செய்தி பரவி வருவதாகவும் , அது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸின் கோர பிடியில் நாம் சிக்கி திக்குமுக்காடி வருகிறோம். இந்த கொரோனா வைரஸ் நம்மை அண்டாமல் இருக்க யார் எதை விற்றாலும் சொன்னாலும் அதை வாங்குகிறோம், செய்கிறோம்.

இந்த தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த கொரோனாவுக்கு டெக்ஸாமெதசோன் என்ற மருந்தை பிரிட்டன் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

ஏப்ரல்

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் 18 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 491ஆக அதிகரித்து, 12% வளர்ச்சியில், அதாவது இரட்டை மடங்கு அதிகரித்தது. ஏப்ரல் ஒன்றாம் தேதி தாராவியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அன்றே ஒரு உயிரிழப்பும் நிகழ்ந்தது. இதற்குப் பின்னர் அங்கு வேகமாக தொற்று பரவியது. 10க்கு 10 சதுர அடி வீட்டில் 9, 10 பேர் என்று குடியிருந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கும் சவாலாகவே இருந்தது. உடனடியாக மும்பை மாநகராட்சி 48 மணி நேரத்தில் செயலில் இறங்கியது. தாராவிக்குள் செல்லும் சாலை மற்றும் வெளியேறும் சாலைகளை மூடியது. 425 பொது கழிப்பிடங்களிலும் கிருமி நாசினி தெளித்தது. வீட்டுக்கு வீடு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வீட்டுக்கே சென்றது உணவு

வீட்டுக்கே சென்றது உணவு

ஏப்ரல் மாதம் வீட்டுக்கே சென்று உணவுகளை வழங்கினர். தாங்களாகவே முன் வந்து நோய் அறிகுறிகளை பதிவு செய்வதற்கு மக்கள் சிறப்பு மருத்துவர்கள் மூலம் ஊக்கப்படுத்தப்பட்டனர். வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் மருத்துவமனைகளிலும், சிலர் அங்கேயே நிறுவப்பட்டு இருந்த முகாம்களிலும், சிலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

தனியார் கிளினிக்

தனியார் கிளினிக்

இதற்குப் பின்னர் ஏழு உயிரிழப்பு பதிவாகி தாராவியில் மொத்த உயிரிழப்பு இதுவரை 79 ஆக உள்ளது. மும்பை மாநகராட்சி முதலில் 47000 பேரை பரிசோதனை செய்த பின்னர், 350 தனியார் மற்றும் தாராவி மருத்துவர்களை பணியில் அமர்த்தியது. அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை மும்பை மாநகராட்சி வழங்கியது. கிளினிக் அமைக்க அனுமதி வழங்கியது. மும்பை மாநகராட்சியும் கிளினிக் அமைத்தது. இவை தவிர சிறப்பு காய்ச்சல் முகாம்களும் அமைக்கப்பட்டன. வேன்களில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்த 'T' மந்திரம்

அந்த 'T' மந்திரம்

நான்கு 'T'க்களை மாநகராட்சி கடுமையாக பின்பற்றியது. அதாவது, 'Tracing, Tracking, Testing, Treating' என்ற நான்கு வழிகளைப் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றை மாநகராட்சி குறைத்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு பாராட்டி இருந்தது.

மகராஷ்டிரா நேற்றைய பாதிப்பு

மகராஷ்டிரா நேற்றைய பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக 5,134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகி உள்ளது. உயிரிழப்பு 224 ஆக பதிவாகி இருந்தது. இந்த மாநிலத்தில் இதுவரை 2,17,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 9,250 ஆக பதிவாகி உள்ளது. மாநிலத்தில் 21 நாட்களுக்குள் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவேன் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்து இருந்தார். ஆனால், இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக இருக்கிறது. தாராவியில் கட்டுப்படுத்தும்போது ஏன் மற்ற இடங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+