சிகிச்சைக்கு வந்த பெண்ணின் அந்தரங்கத்தை படம் பிடித்த டாக்டர்- பதறி புகார் கொடுத்த பெண்
மும்பையில் ஹேர் ரிமூவல் கிளினிக்கில் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் உடம்பை ஆபாசமாக படம் பிடித்ததாக டாக்டர் மீது புகார் எழுந்துள்ளது.
மும்பை: மருத்துவர்களை கடவுளாக நினைத்துதான் நோய்க்கு சிகிச்சைக்கு செல்லும் போது எதையும் மறைக்காமல் சொல்கின்றனர். உடம்பின் பல பகுதிகளையும் தைரியமாக காட்டுகின்றனர். இப்போது மருத்துவத்துறையை சேவையாக பார்க்காமல் வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னையில் சிகிக்சைக்கு வந்த பெண்களின் உடம்பை செல்போனில் படம் பிடித்த டாக்டர் கைது செய்யப்பட்டார் அதே போல மும்பையில் ஹேர் ரிமூவல் கிளினிக்கில் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை படம் பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த வாரம் லோகிந்வாலா பகுதியில் உள்ள கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றார். உடம்பின் பல பகுதிகளில் இருந்த முடிகளை அகற்றும் கிளினிக் அது. பெண்கள் மட்டுமே உதவியாளர்களாக இருக்கும் மருத்துவமனை என்பதால் தைரியமாக சென்று அறைக்குள் ஆடைகளை அகற்றி விட்டு சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஏதோ உறுத்துவது போலவே இருந்தது. பெண் உதவியாளர்களின் செய்கையும் எதையோ உணர்த்துவது போல இருக்கவே விழிப்படைந்த அந்த பெண் தனது செல்போன் மூலம் மைக்ரோ கேமராவை கண்டுபிடிக்கும் ஆப்பை ஆன் செய்தார்.
தீ பிடித்தால் புகை வரும் கருவியில் கேமரா மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தார். தலைக்கு மேலே இருந்த கேமரா தனது அங்கங்களை இஞ்ச் இஞ்ச் ஆக விடாமல் படம் பிடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே டாக்டரிடமும், அந்த பெண்களிடமும் கடுமையாக சண்டை போட்டார் அந்த பெண்.
அதற்கு அந்த டாக்டரோ அசால்டாக பயப்பட வேண்டாம் மேடம், 15 நாட்களில் பதிவான வீடியோ எல்லாமே தானாக அழிந்து விடும் என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறார்கள். அதைக்கேட்டு மேலும் அதிர்ச்சியான அந்த பெண் நேராக போலீசில் போய் புகார் கொடுத்தார்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் டாக்டர் மீதும் உதவியாளர்களாக இருந்த பெண்களின் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேமரா வைக்கப்பட்டிருந்தது முன்பே தெரிந்துதான் அவர் சிகிச்சைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
பல மருத்துவர்கள் இதே போல புகாரில் சிக்கி கைதாகியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தேரி பகுதியில் டாக்டர்கள் கிளப்பிற்கு சென்ற பெண் டாக்டர் மீது தொடக்கூடாத இடத்தில் தொட்டு நடனமாடிய ஆண் டாக்டர் மீது பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதே போல கடந்த ஆண்டு மயிலாப்பூரில் கிளினிக் நடத்தி வந்த 65 வயதான டாக்டர் சிவகுருநாதன் என்பவர் இளம் தம்பதியர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலிப்பதாக கூறி சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போன் மூலம் தவறாக படம் பிடித்ததை கணவன் கண்டுபிடித்து புகார் அளித்தார். அதன்பேரில் சிவகுருநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications