பிபிஇ கிட் அணிந்து இந்தி பாடலுக்கு நடனம் .. மும்பை மருத்துவருக்கு குவியும் லைக்குகள்!!
மும்பை: பாதுகாப்புக் கவசங்களுடன் மும்பை மருத்துவர் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று சமயத்தில் மருத்துவர்கள் சோர்ந்து இருக்கும் நேரத்தில் இவரது வீடியோ புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்து சுவாசிக்க போதிய ஆக்சிஜன் இல்லாமல் திணறி வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவிய ஆரம்பத்தில் மருத்துவர்கள் மீது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதலும் நடந்தது. ஆனாலும், சிரித்த முகத்துடன் அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி இன்று கண்ணுக்குத் தெரியும் கடவுள்களாக காட்சியளித்து வருகின்றனர்.
பல இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வீட்டுக்கு கூட செல்லாமல், தனியாக வீடு எடுத்து தங்கி வருகின்றனர். அல்லது மருத்துவமனையிலே தங்கி வருகின்றனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்களது குடும்பத்தினரை பார்க்காமல் சேவை ஆற்றி வருகின்றனர்.
இந்த நேரத்தில் மருத்துவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மருத்துவர் ரிச்சா நேகி என்பவர் இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து, நோரா ஃபதேஹி, வருண் தவான் நடித்த ஸ்டிரீட் டான்ஸ் 3D என்ற படத்தில் வரும் ''கர்மி'' என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் ரிச்சா நேகி. ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Richa (@dr.richa.negi) on
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ''இந்த தருணத்தில் நாம் நெகட்டிவிட்டியை அனுமதிக்கக் கூடாது. பாசிடிவ் ஆக இருந்து லாக்டவுனை எதிர்கொள்ளலாம்'' என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு மருத்துவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
இந்தப் பதிவில் வருண் தவான், நோராவையும் டேக் செய்து ரிச்சா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரைக்கும் இந்த வீடியோவை 4,51, 639 பேர் பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications