ஹோட்டலில் ரூம் போட்டு செம ஜாலி.. மொத்தம் 8 மாதம்.. ரூ.25 லட்சம் பாக்கி.. கடைசியில் பார்த்தால்.. ஷாக்
8 மாதம் வாடகை தராமல் ஓட்டலில் இருந்து தப்பிய நபரை போலீசார் தேடுகிறார்கள்
மும்பை: ஸ்டார் ஓட்டலில் 8 மாதங்களாக வாடகையே தராமல், ஒருவர் பாத்ரூம் வழியாக எகிறி குதித்து தப்பி உள்ளார்.
நவிமும்பை கார்கர் பகுதியில் "ஹோட்டல் த்ரீ ஸ்டார்" என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஹோட்டலில் முரளிகாமத் என்ற நபர் கடந்த நவம்பர் மாதம் வந்து தங்கினார்.. இவர் மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்தவர்.
இந்த ஹோட்டலுக்கு வரும்போதே தன்னுடைய 12 வயது மகனையும் அழைத்து வந்தார்.. தான் சினிமாவில் வேலை பார்ப்பதாகவும், அது சம்பந்தமாக சில நாட்கள் தங்க வேண்டி உள்ளது என்றும் சொல்லி 2 காஸ்ட்லி ரூம்கள் தனித்தனியாக கேட்டுள்ளார்..

முன்பதிவு
வழக்கமாக ஹோட்டலில் யார் வந்து தங்கினாலும் அவர்களிடம் முன்பதிவு பணம் வாங்குவார்கள்.. ஆனால், முரளி முன்பணம் எதுவும் தரவில்லை.. அதற்கு பதிலாக தன்னுடைய பாஸ்போர்ட்டை தந்துவிட்டு, ஒரு மாதத்தில், சினிமாவில் தனக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும் என்றும், அதை வாங்கி அட்வான்ஸ் தருகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.

முரளி
ஹோட்டல் நிர்வாகமும் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு, அவர் பேச்சையும் நம்பி 2 காஸ்ட்லி ரூம்களை ஒதுக்கியது.. அதில் ஒரு ரூமை தங்க பயன்படுத்தி கொண்ட முரளி, இன்னொரு ரூமை ஆபீஸ் ரூமாக பயன்படுத்த தொடங்கினார்.. ஒரு மாதம் சென்றதும், அட்வான்ஸ் பணத்தை ஹோட்டலில் கேட்டனர்.. ஆனால் இன்னும் தனக்கு பணம் வந்து சேரவில்லை என்று சொல்லி இழுத்தடித்து கொண்டே வந்துள்ளார்.. கடைசிவரை அட்வான்ஸ் பணமும் தரவில்லை.. வாடகை பணமும் தரவில்லை.

நெருக்கடி
இதனால், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரூம் வாடகை தர வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகம் நெருக்கடி தர ஆரம்பித்தது.. இந்நிலையில்தான், கடந்த மாதம் திடீரென ஒருநாள் அவரது அறை கதவு திறக்கவே இல்லை.. தொடர்ந்து கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது அவரையும், அவரது மகனையும் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வாடகை பாக்கி
2 பேருமே பாத்ரூம் ஜன்னல் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது... ஆனால், அந்த ரூமிலேயே லேப்டாப், செல்போன்கள் இருந்தன.. இதுவரை இவர்களின் 2 ரூம்களின் வாடகை பாக்கி மட்டும் 25 லட்சம் ரூபாயாம்.. எங்கெங்கோ தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.. ஹோட்டலை விட்டு ஊழியர்கள் பல பகுதிகளுக்கு சென்று இவர்களை தேடி பார்த்தனர்.. அவர்கள் எங்குமே கிடைக்கவில்லை..

விசாரணை
இதற்கு பிறகுதான் மும்பை போலீசுக்கு சென்றனர்.. முரளி கொடுத்த பாஸ்போர்ட் அட்ரஸை வைத்து அவரை தேடி வருகிறது போலீஸ்.. 8 மாதமாக ராஜபோக வாழ்க்கையை ஸ்டார் ஹோட்டலில் வாழ்ந்துவிட்டு, பாத்ரூம் ஜன்னல் வழியாக எகிறி குதித்த நபரால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications