உடலுறவுக்கு மறுத்த மனைவி.. கணவன் கொடுத்த கொடூர தண்டனை.. அதிர்ந்துபோன மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் உடலுறவுக்கு மறுத்த மனைவி மீது தீவைத்து கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் தீக்காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் அருகே இருக்கும் வாஷி நாகா பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் அவ்ஹாத். இவருக்கு 46 வயது ஆகிறது. இவரது மனைவி பெயர் ரேகா. இவருக்கு 38 வயது ஆகிறது.

mumbai crime

ரேகா, வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் திடீரென்று கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த தினேஷ் அவ்ஹாத் தனது மனைவி ரேகாவை தாக்கி உள்ளார்.

அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ரேகா மீது ஊற்றியதோடு, கியாஸ் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை பேப்பரில் பிடித்து ரேகா மீது வீசி உள்ளார். இதனால் ரேகாவின் உடலில் தீப்பிடித்தது. அலறி துடித்தார் ரேகா. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரேகாவின் உடலில் பிடித்த தீயை அணைத்து சியானில் உள்ள லோக்மான்யா திலக் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் ரேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வயிறு, கால், கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. மொத்தமாக அவரது உடலில் 33 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி ஆர்சிஎப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேகாவின் கணவர் தினேஷ் அவ்ஹாத்தை கைது செய்தனர். தினேஷ் அவ்ஹாத் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினேஷ் அவ்ஹாத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர வைத்தது. சம்பவம் தொடர்பாக தினேஷ் அவ்ஹாத் போலீசில் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‛‛கைதான தினேஷ் அவ்ஹாத்திடம் விசாரணை மேற்கொண்டோம். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மனைவியுடன் உடலுறவு வைக்க தினேஷ் அவ்ஹாத் அழைத்துள்ளார். ஆனால் வேலை அதிகம் உள்ளது என்று கூறி மனைவி மறுத்துள்ளதோடு, வீட்டு வேலைகள் செய்ய புறப்பட்டுள்ளார். இதில் கோபமாகி தினேஷ் அவ்ஹாத் அவர் மீது மண்ணெயை ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+