பாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்
சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுமி என்றும் பார்க்காமல் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து காட்டி அசிங்கம் செய்துள்ளான்.
மும்பை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீஸ் சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் சீரழிக்கின்றனர். மும்பையில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்திய காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாக்லேட் தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துப்போய் அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சிறுமி என்றும் பாராமல் அசிங்கமாக நடந்து கொண்ட அந்த போலீஸ்காரரின் பெயர் சஞ்சய் வாக்மோட் என்பதாகும். 32 வயதாகும் அவர் கடந்த 14 ஆம் தேதியன்று கடைக்கு சாக்லேட் வாங்க வந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. வீட்டில் சாக்லேட் வாங்க கடைக்குப் போன சிறுமியை மறித்து சாக்லேட் தருவதாக கூறி தனது இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்றார்.

பேண்ட் ஜிப்பை திறந்து தனது உறுப்பின் மீது சாக்லேட்டை வைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து விட்டாராம். ஆனால் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லையாம். கடந்த 18ஆம் தேதியன்று மீண்டும் கடைக்குப் போன சிறுமியை சஞ்சய் மறித்துள்ளார். வீட்டுக்கு வந்தால் சாக்லேட் தருவதாக கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த சிறுமி வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்.
பயந்து போன சிறுமி வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். அதைப்பார்த்த அந்த சிறுமியில் 8 வயது அண்ணன் கேட்டதற்கு, அழுது கொண்டே நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இரண்டு முறை தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக கூறி அழவே, அதை வேலைக்கு போய் வீட்டுக்கு திரும்பிய தனது தாயிடம் அந்த சிறுவன் கூறியுள்ளான்.
ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தாயார், வடலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சிறுமி சிறுவர் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தார். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது, அவரை கட்டி வைத்து பொதுமக்களே உதைத்தனர். போராட்டம் நடத்தியதன் பேரில் அந்த சப் இன்ஸ்பெக்டரை கைது செய்து சஸ்பெண்ட் செய்தனர். இப்போது மும்பையில் 4 வயது சிறுமியிடம் காவலர் ஒருவர் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications