ஹைஅலர்ட்.. லாரி நிறைய ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருள்? மும்பை டூ கோவா போகுதாம்! ஒரு போனால் டென்ஷன்!
மும்பை: மும்பையில் இருந்து கோவாவுக்கு லாரியில் ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்கள் ஏற்றி கொண்டு 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் செல்வதாக வந்த தகவலால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் 2 மாநிலங்களும் உஷார்ப்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தொழில் ரீதியாக மகாராஷ்டிரா முக்கிய மாநிலமாக உள்ளது. அதேபோல் கோவாவுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் கோவா சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று ஒருவர் போன் செய்து பேசினார். அப்போது அந்த நபர் கூறிய தகவல் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு அறையையும் பதற்றமடைய செய்தது.
அதாவது அந்த நபர், ‛‛மும்பையில் இருந்து கோவாவுக்கு வெள்ளை நிறத்தில் லாரி செல்கிறது. அந்த லாரியில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து உள்ளது. இதனை 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் கொண்டு செல்கின்றனர்'' எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை பரபரப்பாகி போனது.
உடனடியாக மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத ஒழிப்பு படைக்கும், கோவா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளை நிற லாரி மட்டுமின்றி சந்தேகத்துக்குரிய அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போனில் பேசிய நபர் தனது பெயரை பாண்டே என தெரிவித்துள்ளார். மேலும் அவர் எங்கு உள்ளார்? அவரது பின்னணி என்ன ? என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 13ம் தேதி ஒருவர் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து 26/11 தாக்குதலைப் போன்ற தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தார். பாகிஸ்தானில் இருந்து பப்ஜி மூலம் பழக்கமான சீமா ஹைதர் என்ற பெயர் நொய்டாவில் உள்ள நபருடன் சேர்ந்து வாழ்கிறார். அவரை நாட்டுக்கு அனுப்பி வைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பாக கடந்த 12ம் தேதியும் இதேபோல் சீமா ஹைதர் விவகாரத்தில் மிரட்டல் போன்கால் சென்றிருந்தது.
இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு வாரத்துக்குள் 3வது முறையாக போன்கால் வந்துள்ளது. மேலும் முதல் 2 போன்காலில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களுடன் மும்பையில் இருந்து கோவா செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் அலர்ட் ஆகி வாகன சோதனை மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications