மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. திடுக்கிட வைக்கும் வீடியோக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    MUMBAI RAINS | வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை! மீட்பு பணிகள் தீவிரம்- வீடியோ

    மும்பை: கடந்த இரு நாட்களில் 540 மிமீ மழை கொட்டி தீர்த்ததால், மும்பை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.

    திங்கள்கிழமையான நேற்று மட்டும் மும்பை நகரத்தில் 91.9 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூலை 2, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், தானே மற்றும் பால்கர் பகுதிகளில் "மிக அதிக மழை" பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மும்பையில் ஒரு சில இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. ஜூலை 3 மற்றும் 5 க்கு இடையில் மும்பை "வெள்ள அபாயத்தில்" இருப்பதாக தனியார் வானிலை நிறுவனம் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. "இந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 200 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட அளவு மழை பெய்யக்கூடும்" என்று அது கூறியுள்ளது.

    பயணிகளின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனைகளை நடத்தி வருகிறார் என்று மேற்கு ரயில்வே ட்வீட் செய்துள்ளது. ரயில் பாதையில் நீர் தேங்கியதால், தானே நிலையத்தில் பெரும் பயணிகள் கூட்டம் காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் மும்பை கடலில் வரப்போகுது ராட்சத அலைகள்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங் அடுத்த சில நிமிடங்களில் மும்பை கடலில் வரப்போகுது ராட்சத அலைகள்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்

    வாகனம் ஓடவில்லை

    குர்லா பகுதியில், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வாகன நடமாட்டம் ரொம்பவே கம்மியாக உள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களில் செல்வதை மட்டும் பார்க்க முடிகிறது.

    நீர் சூழ் உலகு

    சாந்தாகுரூஸ் கிழக்கு பகுதி, வெள்ளத்தில் மிதப்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். வாகனங்கள் எந்த அளவுக்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

    கொடுமை

    அடக் கொடுமையே என சொல்லத் தோன்றுகிறது, இந்த வீடியோவை பார்த்தால். ஒரு காரையே மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் அங்கே சூழ்ந்துள்ளது.

    வீடுகளுக்குள் வெள்ளம்

    மும்பை ஜார்ஜியன் மேற்கு பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதை, இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.

    அதிகாலை வெள்ளம்

    ஜார்ஜியன் பகுதியில், இன்று அதிகாலை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சியை பீதியோடு இந்த நெட்டிசன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    English summary
    After a delayed arrival of the monsoon this year, the slowest onset in 45 years, the financial capital has received 550 mm of rainfall in two days in Mumbai, the highest over a two-day period in a decade.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X