ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது.. மும்பையில் ரேபிடோ பைக்கில் உலா வந்தவன் சிக்கினான்.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திரா காந்தி போல் பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்து உலா வந்த 'ஜெய்ஷ் இ முகமது' எனும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதியை மும்பையில் இன்று பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். பயங்கரவாதி என்பதை மறைக்க அவன் ரேபிடோ ஓட்டி வந்தது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

mumbai-rapido-driver-arrested-for-links-jaish-e-mohmmed-terrorist-organisation

மும்பை மஹிம் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே பயங்கவராதி ஒருவர் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத ஒழிப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாத ஒழிப்பு படையினர் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முகமது ஹாசன் அபு சர்மத் அக்தர் (வயது 33) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த பயங்கரவாத ஒழிப்பு படையினரை அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி பயங்கரவாத ஒழிப்பு படையினர் கூறுகையில், ''முகமது ஹாசன், பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்துள்ளார். நாட்டில் மதரீதியாக வெறுப்புணர்வை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதஅமைப்பின் தலைவரான மவுலானா மசூத் அசார் பேசிய ஆடியோவை பகிர்ந்துள்ளார். குறிப்பாக பாபர் மசூதி விவகாரத்தில் மசூத் அசார் பேசிய சர்ச்சைக்கரிய ஆடியோவை 'இந்தியன் முஸ்லிம்' என்ற டெலிகிராம் குழுவில் பகிர்ந்துள்ளான்.

அதேபோல் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவில் டெலிகிராம் வழியாக இணைந்துள்ளான். தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை செய்து வந்துள்ளான். சமீபத்தில் பிரதமர் மோடியின் மும்பை பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.

அப்போது இந்திரா காந்தி போல் பிரதமர் மோடிக்கும் நடக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளான். இந்திரா காந்தியை கொன்றது போல் பிரதமர் மோடியையும் கொல்ல வேண்டும் என பொருள்படும்படி இந்த கருத்தை அவன் தெரிவித்து இருந்தான்.

கைதான முகமது ஹாசனிடம் இருந்து ஒரு செல்போன், சர்ச்சைக்குரிய 39 ஸ்கிரீன்ஷாட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதை மறைப்பதற்காக ரேபிடோ ஓட்டுவதோடு, வாசனை திரவியங்கள் விற்பனையையும் செய்து வந்துள்ளார்.

இந்த முகமது ஹாசன் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 196 (1) (இருபிரிவினர் இடையே மதத்தின் அடிப்படையில் பகைகை உருவாக்குதல்) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+