Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவில் சர்வீஸ் தேர்வில் பல முறை முயற்சி செய்தும் வெற்றி பெற முடியாத நிலையில், இடைவிடாமல் போராடிய தூய்மை பணியாளர் மகன் 9வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகளில் காலியாக உள்ள
ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீசஸ் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 4 முறையும், பொருளாதாரத்தில் நலித்த உயர் வகுப்பினர் 6 முறையும், ஓபிசி பிரிவினர் 9 முறையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுக்கு தயாராகலாம்.

Mumbai sanitary worker Son Cleared Civil Services Exam 9th Attempt

கடந்த 2023ம் ஆண்டுக்கான அறிவிப்பில் 1,105 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது, முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 28-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். தேர்வு முடிவு, அதற்கு அடுத்த மாதமே வெளியானது.

முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வை சந்தித்தார்கள். கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த தேர்வு நடந்தது. முதன்மை தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 844 பேர் தேர்ச்சி பெற்றார்கள். அதில் 134 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 9-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதிலும் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது அதில் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்களின் பட்டியலையும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

முதலில் 1,105 காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில், அது தற்போது 1,143 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதில் 180 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள், 37 ஐ.எப்.எஸ். பணியிடங்கள், 200 ஐ.பி.எஸ். பணியிடங்கள் , 613 குரூப்-ஏ பணியிடங்கள், 112 குரூப்-பி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்..

அதாவது 1,016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் பொதுப்பிரிவில் 347 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு பிரிவில் 115 பேரும், ஓ.பி.சி. பிரிவில் 303 பேரும், எஸ்.சி. பிரிவில் 165 பேரும், எஸ்.டி. பிரிவில் 86 பேரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

ஐஏஎஸ் தேர்வில் முதல் 3 இடங்களை ஆதித்யா ஸ்ரீவஸ்தவா, அனிமேஷ் பிரதான், டோனூரு அனன்யா ஆகியோர் பிடித்துள்ளார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 42 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வில் பலர், வறுமையை தாண்டி வெற்றி பெற்றுள்ளாரகள். அதில் ஒருவர் தான் பிரசாந்த் போஜனே. மும்பையில் உள்ள துப்புரவு தொழிலாளியின் மகன் ஆவார். மும்பையை அடுத்த தானே கார்டன் ரோடு துப்புரவு பணியாளர்கள் காலனியில் வசிக்கும் சுரேஷ -சோனாலி தம்பதி மகன் தான் பிரசாந்த் போஜனே. பிரசாந்த் போஜனேவின் அம்மா சோனாலி தானே மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தந்தை சுரேஷ், மாநகராட்சி 'டி குரூப்' ஊழியராக வேலை செய்கிறார்.

பிரசாந்த் போஜனே நவிமும்பை கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். 10 வருடம் முன்பு என்ஜினீயரிங் முடித்த பிரசாந்த், ஐ.ஏ.எஸ். ஆக விரும்பினார்.. இதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானார். யுபிஎஸ்சி நடத்தும் தேர்வில் வெற்றி பெற விரும்பி, 9 வருடம் முன்பு டெல்லி சென்றார்.

அதாவது கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் பிரசாந்த் தோல்வி அடைந்தார். முதல் முயற்சியில் தோற்றவரை குடும்பத்தினர் உற்சாகப்படுத்தி, இரண்டாவது முறையாக தேர்வுக்கு தயாராகுமாறு உற்சாகப்படுத்தினர். பிரசாந்த் போஜனேவும் அடுத்த முயற்சியில கடினமாக உழைத்தார்.

எனினும் அடுத்தடுத்த தேர்வுகளிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.. ஒருமுறை அல்ல,, இருமுறை அல்ல தொடர்ந்து பல முறை தோற்றார். இதில் ஒருகட்டத்துக்கு மேல் பெற்றோரே தங்களது மகன் மீது நம்பிக்கை இழந்ததுடன், ஊருக்கு திரும்பி வந்து ஏதாவது வேலைக்கு போ சாமி என்று கெஞ்சினார்கள்..

எனினும் பிரசாந்த் போஜனே நம்பிக்கையை கைவிடாமல் 9வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கவனம் செலுத்தி வந்தார். படிப்பு பெற்றோர் ஒரு கட்டத்தில் பணம் கொடுக்காத நிலையில், டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் வேலை பார்த்து கொண்டே தேர்வுக்கு ரெடியானார். கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை 9-வது முறையாக எழுதினார்.

இந்த தேர்வு முடிவை கடந்த 16-ந்தேதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் பிரசாந்த் போஜனே பெயர் முதல்முறையாக வந்துள்ளது. அவர் தேசிய அளவில் 849-வது இடம் பிடித்தார். விடா முயற்சியால் வெற்றி பெற்றுள்ளார்.. 2020ம் ஆண்டே பெற்றோர் திரும்பி வரும்படி கூறியபோதும், தன் முடிவில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருநத பிரசாந்த் வெற்றி பெற்றார். "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது" என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+