கொரோனா ஆட்டம்.. பெரும் சரிவோடு தொடங்கிய மும்பை பங்குசந்தை.. சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிவு!
கொரோனா காரணமாக உலகம் முழுக்க பங்குசந்தைகள் சரிந்து வரும் நிலையில் இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவோடு தொடங்கி உள்ளது.
மும்பை: கொரோனா காரணமாக உலகம் முழுக்க பங்குசந்தைகள் சரிந்து வரும் நிலையில் இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவோடு தொடங்கி உள்ளது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்தது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பெரும் பீதி மற்றும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலகம் முழுக்க தற்போது 169605 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 6,518 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுக்க 120 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டள்ளது.

போக்குவரத்து எப்படி
அதேபோல் உலகம் முழுக்க விமான போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் இதனால் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. தற்போது இது உலகம் முழுக்க பங்கு சந்தையில் எதிரொலித்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளின் பங்கு சந்தை மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

எல்லாம் மோசம்
பல நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டீசல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
கொரோன அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவோடு தொடங்கி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே வர்த்தகத்தின் போது பங்கு சந்தை 10 நிமிடத்தில் 3000 புள்ளிகள் சரிந்தது . இதனால் 45 நிமிடம் பங்கு சந்தை இடைவெளி விடப்பட்டு பின் மீண்டும் தொடங்கியது.

மீண்டும் ஏற்றம்
மீண்டும் தொடங்கிய பங்கு சந்தை கொஞ்சம் முன்னேற்றம் கண்டு கடைசியில் ஏற்றத்துடன் முடிந்தது. ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்கு சந்தையின் கருப்பு வெள்ளிக்கிழமை என்று அறிவிக்கப்பட்டது. இன்றும் தற்போது பங்கு சந்தை சரிவோடு தொடங்கி உள்ளது . முதலில் 1400 புள்ளிகள் சரிவோடு வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்தது.

யார் எல்லாம்
மும்பை பங்கு சந்தை 32,245இல் வணிகம் செய்யப்படுகிறது. நிஃப்டி 585புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது. தற்போது நிஃப்டி வெறும் 9,587.80 புள்ளிகளில் வர்த்தகம் செய்து வருகிறது. முக்கியமாக எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐஓபி ஆகிய வங்கிகள் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் தற்போது பங்கு சந்தை சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications