ஆன்லைன் கிளாஸில் பதில் அளிக்காத மகள்.. பென்சிலால் குத்தியும் கடித்தும் ஆத்திரத்தை தீர்த்த தாய்
மும்பை: மும்பையில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு 12 வயது மகள் பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுமியை பென்சிலால் குத்தி பல இடங்களில் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.
எனினும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுத்தான் வருகின்றன. எல்கேஜி வகுப்பு முதல் காலேஜ் வரை ஆன்லைன் வகுப்புகளால் பிள்ளைகள் பாடாய்படுத்தப்படுகிறார்கள்.

பெற்றோர்
பெற்றோரும் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் ஆன்லைன் வகுப்புகளை போட்டு திணிக்கிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் புரியாமல் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அது போல் வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால் மூவருக்கும் நவீன செல்போன், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றால் பெற்றோர் அவதிப்படுகிறார்கள்.

ஆன்லைன் வகுப்பு
ஒரே போனில் இரு குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பை பார்க்குமாறு கூறியதால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இப்படி மாணவர்கள்தான் புத்தி பேதலித்து போய் இருக்கிறார்கள் என்றால் பெற்றோர் அதற்கு மேல் உள்ளார்கள்.

ஆன்லைன்
மும்பையில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு 12 வயது மகள் பதிலளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுமியின் முதுகில் பென்சிலை கொண்டு குத்தியுள்ளார். அது போல் அந்த சிறுமியை பல இடங்களில் கடித்துள்ளார். 6 ஆவது படிக்கும் இந்த சிறுமி தினந்தோறும் இந்த சித்திரவதையால் அவதிப்படுகிறார்.

மும்பை போலீஸார்
இதை பார்க்க மனமில்லாத அந்த சிறுமியின் தங்கை 1098 குழந்தைகள் உதவி மையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் என்ஜிஓ அமைப்பை சேர்ந்த இரு நபர்கள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்ததை அடுத்து அவர் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications