அதிகாலை 2 மணிக்கு திருட வந்தவரிடம் எய்ட்ஸ்னு சொன்ன பெண்! அடுத்து நடந்த டிவிஸ்ட்! மும்பையில் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போரிவலி பகுதியில் கொள்ளையடிக்க வந்த திருடனிடம் பெண் ஒருவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறியதை அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
எங்கு பார்த்தாலும் ஒரே கொலை, கொள்ளை... அப்போதெல்லாம் வீட்டில் ஆள் இல்லாவிட்டால்தான் இறங்குவார்கள். ஆனால் இப்போதோ வீட்டில் ஆள் இருந்தாலும் எப்படியாவது கட்டி போட்டோ, தாக்கியோ கொள்ளை அடிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட தேவைப்பட்டால் கொன்றுவிட்டு கூட கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகிறார்கள். பீரோவில் நகை, பணம் வைத்தால் திருடர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என சமையல் அறையில் அரிசி அண்டா, மளிகை பொருட்களில் வைத்தாலும் எப்படியாவது கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருட வந்தவரை தன்னந்தனியே இருந்த பெண் ஒருவர் தலைத்தெறிக்க ஓட விட்டுள்ளார். அந்த சம்பவம் என்ன என்பதை பார்ப்போம். மும்பையை அடுத்த போரிவலி பகுதியை சேர்ந்தவர் 53 வயது பெண். இந்த பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவரது கணவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மகனும் மருமகளும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இதனால் இவர் தரைதளத்தில் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார். இந்த நிலையல் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிகாலை 2 மணிக்கு இவரது வீட்டிற்குள் யாரோ நுழைந்துவிட்டார். அவருக்கு வயது 20 இருக்கும். மாஸ்க் அணிந்திருந்தாராம். வீட்டின் ஹாலில் நின்றுக் கொண்டிருந்தாராம். அப்போது ஏதோ சப்தம் கேட்டு கண் விழித்த அந்த பெண் எழுந்து வந்து பார்த்த போது ஜன்னல்கள் திறந்திருந்தன.
அப்போது ஹாலில் அந்த மர்மநபர் இருந்துள்ளார். உடனே எப்படி நீ வீட்டிற்கு நுழைந்தாய் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் எந்த பதிலையும் சொல்லவில்லையாம். ஆனால் அவர் போதையில் இருந்தது தெரிந்தது. கேள்வி கேட்ட போதே அந்த பெண்ணிடம் அந்த நபர் வந்துள்ளார். அப்போது அந்த பெண் சாமர்த்தியமாக தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்தார்.
மீறி வந்தால் ரத்தத்தை எடுத்து உன் மீது பூசிவிடுவேன் என பயமுறுத்தியுள்ளார். இதனால் அஞ்சிய அந்த நபர் அந்த பெண்ணை உள்ளே தள்ளி கதவை தாழிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் அந்த பெண் கதவை திறக்குமாறு தனது பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்ததும் அவர் திறந்துவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு புகாராக கொடுத்தார்.
இதே போல் பாலசந்தர் இயக்கிய கல்வி எனும் படத்தில் ஸ்ருதி என்ற பெண் மிகவும் தைரியசாலியாக இருப்பார். ஒரு முறை வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை இளைஞர்கள் சிலர் வழிமறித்து தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். உடனே ஸ்ருதி சாமர்த்தியமாக அவர்களிடம் இருந்து தப்ப நினைக்காமல், எனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பார். உடனே அந்த கும்பல் தலைத்தெறிக்க ஓடுவர். இந்த கதையை கீதாவிடம் சொல்லி சிரிப்பார் ஸ்ருதி.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications