துரோகத்துக்கு பழிதீர்ப்போம்.. பொறுத்திருந்து பாருங்கள் ஷிண்டே .. ஆக்ரோஷமாக சூளுரைத்த உத்தவ் தாக்கரே!
ஒருமுறை துரோகம் செய்தவன் எப்போதுமே துரோகியாகவே இருப்பான் என பழமொழி உண்டு. அதற்கு உதாரணமாக மாறிவிட்டார் ஷிண்டே.
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனாவின் பெயரும், சின்னமும் சொந்தம் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த தீர்ப்பை, ஜனநாயகப் படுகொலை என உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு இது தற்காலிகமாக கிடைத்த வெற்றிதான் என்றும், துரோகத்துக்கு விரைவில் பழிதீர்ப்போம் எனவும் உத்தவ் தாக்கரே ஆவேசமாக சூளுரைத்தார்.
சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாஜகவை அலறிவிட்ட தாக்கரே
மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியமைக்க தயாரானது சிவசேனா. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வைத்த கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதனால் அக்கட்சியுடனான கூட்டணியை உடைத்த உத்தவ் தாக்கரே, தனது கொள்கையுடன் முற்றிலும் மாறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

பாஜக கொடுத்த பதிலடி
இந்த சூழலில், உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, திடீரென உத்தவ் தாக்கேரவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இந்துத்துவா கொள்கைகளை உத்தவ் தாக்கரே விட்டுக்கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, 35 சிவசேனா எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக நின்றனர். முடிவில், தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த ஷிண்டே முதல்வராக பதவியேற்றார்.

"ஜனநாயகப் படுகொலை"
இதனிடையே, உண்மையான சிவசேனா நாங்கள்தான் என இரு அணிகளுக்கும் இடையே பிரச்சினை எழுந்து வந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை இன்று விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அவர்களுக்கு வில் அம்பு சின்னமும் சொந்தம் என அதிரடியாக அறிவித்தது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை" எனக் கூறினார்.

"தவறான முன்னுதாரணம்"
மேலும் உத்தவ் தாக்கரே கூறுகையில், "கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? இது முழுக்க முழுக்க ஜனநாயகப் படுகொலை. இனி யார் வேண்டுமானாலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி முதல்வராகவோ, பிரதமராகவோ ஆக முடியும் என்ற தவறான முன்னுதாரணத்தை இந்த தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

"பழிதீர்ப்போம்"
அவர்கள் (ஷிண்டே அணி) சிவசேனாவின் சின்னத்தை திருடிவிட்டனர். ஒருமுறை துரோகம் செய்தவன் எப்போதுமே துரோகியாகவே இருப்பான் என பழமொழி உண்டு. அதற்கு உதாரணமாக மாறிவிட்டார் ஷிண்டே. தான் செய்த திருட்டுக்கு தற்காலிகமாக வெற்றி கிடைத்திருப்பதால் ஷிண்டே இன்று மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்காது. துரோகத்துக்கு நிச்சயம் நாங்கள் பழிதீர்ப்போம். சிவசேனாவை மீட்க தொடர்ந்து போராடுவோம். பொறுத்திருந்து பாருங்கள் ஷிண்டே" என உத்தவ் தாக்கரே கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications