"முஸ்லிம் பையா".. 2 சகோதரிகளை தத்தெடுத்து.. இந்து முறைப்படி கல்யாணம் செய்து வைத்து.. உருக்கும் சபாஷ்
2 இந்து சகோதரிகளை தத்தெடுத்து திருமணம் செய்து வைத்த முஸ்லிம் நபருக்கு வாழ்த்து குவிகிறது
மும்பை: ஒரு முஸ்லிம் நபர், 2 இந்து பெண்களை சகோதரிகளாக தத்தெடுத்து, அவர்களுக்கு இந்து முறைப்படியே கல்யாணமும் செய்து வைத்துள்ளார்.. மாமியார் வீட்டுக்கு போகும் பெண்களை கட்டி அணைத்து கொண்டு இந்த சகோதரர் கதறி அழும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர் பாபாபாய் பதான்.. இவருக்கு சகோதரிகள் யாருமே இல்லை.. அதற்காக ஏங்கி தவித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்து சகோதரிகளை தத்தெடுக்கவும் முடிவு செய்தார்.. அதன்படியே 2 பெண்களை தத்தெடுத்தார்.. அவர்கள் 2 பேருமே இந்துக்கள்.. அளவுகடந்த பாசத்தை அந்த பெண்களிடம் பொழிந்தார் பாபா.

தத்தெடுப்பு
ஒரு குறையுமில்லாமல் வளர்த்தார்.. தற்போது 2 பேருமே கல்யாண வயதை அடைந்துவிட்டனர்.. அவர்களுக்கு ஜாம் ஜாம் என்று கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார் பாபா.. அந்த சகோதரிகளின் விருப்பப்படியே, இந்து முறைப்படி இந்த கல்யாணம் நடந்துள்ளது.. அகமத் நகர் மக்களே இந்த கல்யாணத்தை வாயை பிளந்து கொண்டு ஆச்சரியப்பட்டனர்... ஊரே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது.

ட்வீட்
ஆரிஃப் ஷா என்ற செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.. "மகாராஷ்டிராவில் உள்ள அகமத் நகரை சேர்ந்த பாபாபாய் பதான் என்ற முஸ்லிம், 2 ஆதரவற்ற சகோதரிகளை தத்தெடுத்து, அவரது சொந்த செலவில் இந்து முறைப்படி திருமணமும் செய்து முடித்துள்ளார். தனது மதத்தைக் கடந்த மனிதநேய செயலுக்காக பாபாபாய் பதான் பாராட்டப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளர்.

கல்யாணம்
அந்த கல்யாண போட்டோவையும் ட்விட்டர் பக்கத்தில் இவர் ஷேர் செய்திருந்தார்.. 2 சகோதரிகளும் கல்யாணம் முடிந்ததும், அண்ணனிடம் ஆசி வாங்க வருகிறார்கள்.. அப்போது, கணவர் வீட்டுக்கு தன்னை விட்டு பிரிந்து செல்லும் அந்த பெண்களை கட்டி அணைத்தபடி பாபா கண்கலங்கி அழுகிறார்.. அந்த போட்டோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ
இதை பார்த்ததும், பாபாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள் நெட்டிசன்கள்.. சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உருவாக்கும் பாபா போன்ற நல்ல உள்ளங்களை அனைவரும் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்... இதுபோன்ற ஒற்றுமைகள் இருந்தாலும் எந்த சக்தியாலும் பிரிவினையை நம்மிடம் உண்டு பண்ண முடியாது என்றும் சொல்லி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications