மட்டன் வாங்க கறிக்கடைக்கு போன நபர்.. இப்படியும் நடக்குமா?..மண்டை காய்ந்த ஓனர்..கடைசியில பார்த்தால்?
மும்பை: ஆட்டுக்கறி வாங்க ஆசை ஆசையாக வந்தார் மகேந்திர ராம்.. ஆனால், அந்த கறிக்கடையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், சாய் நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மகேந்திர ராம்... நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆட்டுக்கறி வாங்குவதற்காக சென்றிருக்கிறார்.

வழக்கமாக இவர் கறி வாங்கும் மட்டன் ஸ்டால், அதே பகுதியில்தான் உள்ளது.. நேற்று மதிய நேரம் இவர் கறிக்கடைக்கு சென்றபோது, கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால், அவர்கள் எல்லாம் வாங்கி செல்லும்வரை அங்கேயே வரிசையில் காத்திருந்தார்.
மகேந்திர பாபு: அப்போது, மகேந்திர ராமுக்கு, தெரிந்தவர் ஒருவரும் கறிவாங்க கடைக்கு வந்திருந்தார்.. அவர் பெயர் மகேந்திர பாபு.. தனக்கு அறிமுகமானவர் என்பதால், அவருடன் மகேந்திர ராம் பேசிக்கொண்டிருந்தார்.. திடீரென முன்விவகாரம் தொடர்பான பேச்சுக்களை எடுத்தனர்.. அப்போது 2 பேருக்குமே தகராறு வந்துவிட்டது.. ஆளாளுக்கு தடித்த வார்த்தைகளை பேசி, ஆவேசமாகிவிட்டார்கள். இந்த ஆவேசம் கறி வாங்கும்வரை நீடித்தபடியே இருந்தது.
அதனால், யார் முதலில் கறி வாங்குவது என்பதில் போட்டி ஏற்பட்டது. 2 பேருமே தங்களுக்குதான் முதலில் கறியை தர வேண்டும் என்று கடைக்காரரிடம் சண்டை போட்டார்கள். 2 பேருமே, தங்களது ரெகுலர் கஸ்டமர் என்பதால், எப்படி சமாதானம் செய்வது என்பது தெரியாமல் மட்டன் கடைக்காரர் குழம்பிவிட்டார்.
கஸ்டமர்கள்: வாடிக்கையாளர் இடையிலான இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக, அதே மட்டன் கடையில் வேலைபார்க்கும் ஷேக் ரெஹ்மான் என்ற 22 வயது இளைஞர் முயற்சி செய்தார்.. 2 பேருமே தங்களுக்குதான் முதலில் கறியை வெட்டி தர வேண்டும் என்று அடம்பிடித்தார்கள்.. இறுதியில், ஷேக் ரெஹ்மான் ஒரு முடிவுக்கு வந்தார்.
அதன்படி, கடைக்கு முதலில் கறி வாங்க வந்தவர் மகேந்திர ராம் என்பதால், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மகேந்திர ராமுவுக்கு கறியை வழங்கி அனுப்பி வைத்தார். இதை பார்த்ததும், மகேந்திர பாபு கடுப்பாகிவிட்டார்.. ஏற்கனவே கோபமாக இருந்தவர், ஷேக் ரெஹ்மான் மீது ஆவேசம் அடைந்து தாக்க தொடங்கினார்..
ஒருகட்டத்தில், கறிவெட்டும் கத்தியை எடுத்துவந்து, ஷேக் ரெஹ்மானை, மகேந்திரபாபு சரமாரி தாக்கினார்.. இதனால் காயமடைந்த ஷேக் ரெஹ்மானும், கறிக்கடையில், கறி வெட்டும் இன்னொரு கூர்மையான பொருளை கொண்டு வந்து, மகேந்திர பாபுவை தாக்கினார். இதில், தலை, மார்பு, கை கால்களில் பயங்கரமான வெட்டுக்காயத்துடன் மகேந்திர பாபு மயங்கி விழுந்தார்...
ஈகோ: இதை பார்த்ததும் பதறிப்போன ஷேக் ரெஹ்மான், அவசர அவசரமாக கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் மகேந்திர பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து, ஷேக் ரெஹ்மானை போலீசார் கைது செய்தனர்.. இந்த மோதலில் ஈடுபட்ட இன்னொரு கஸ்டமரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். கறி வாங்க வந்தஇடத்தில் வெடித்த ஈகோ பிரச்சனையானது, கொலை வரை சென்றுவிட்டது நாக்பூரையே நடுங்க செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications