பெண்களுக்கு மாதம் ரூ.3000! மகாராஷ்டிராவில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது காங்கிரஸ் கூட்டணி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான, மகாவிகாஸ் அகாடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில், மகாவிகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகையும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இங்கு சிவசேனா தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இக்கட்சியுடன் கைகோர்த்து ஆட்சியை கைப்பற்ற பாஜக முயன்ற நிலையில், அதற்கு சிவசேனா ஒத்து வரவில்லை. எனவே ஷிண்டே தலைமையில் சில எம்எல்ஏக்கள் பிரிந்து பாஜகவில் இணைய.. பெரும்பான்மையை இழந்த சிவசேனா அரசு வீழ்ந்தது. இதனையடுத்து நாங்கள்தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே தரப்பு உரிமை கோர, கட்சி இரண்டாக உடைந்தது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கும் இதே நிலைமைதான்.

இப்போது உத்தவ் தலைமையில் இருக்கும் சிவசேனாவும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும், காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியை இக்கூட்டணி வெளியிட்டிருக்கிறது. இதில்,
பெண்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை
இலவச பேருந்து பயணம்
ரூ.3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி
விவசாய கடனை முறையாக செலுத்துபவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை
வேலையில்லாத இளைஞர்களுக்கும் மாதம் ரூ.4,000 உதவித்தொகை
ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு
போன்ற வாக்குறுதிகள் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன. தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இதே போன்ற வாக்குறுதிகள் மக்களை வெகுவாக ஈர்த்தருந்தன. எனவே, இந்த பணியை பின்பற்றி மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மகா விகாஸ் கூட்டணி முயன்று வருகிறது. வாக்குறுதிகளை வெளியிடும்போது பேசிய ராகுல் காந்தி, இடஒதுக்கீடு உச்சவரம்பு 50% என்பதை நிச்சயம் தகர்ப்போம் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இக்கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைத்திருந்தன. எனவே, எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என்று மகாவிகாஸ் கூட்டணி நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications