பிரியாணி + தர்பூசணி மர்ம மரணம்! பச்சையாக மாறிய இதயம், மூளை! தடயவியல் அறிக்கையில் திடுக் தகவல்கள்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரியாணியும் தர்பூசணியும் சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்களது உடம்பில் ஒரு விஷம் இருந்தது கண்டறியப்பட்டது.
மும்பையில் வசித்து வந்த மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையாளர் அப்துல்லா டோகாடியா (45), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் அவர்களது மகள்கள் ஸைனப் (13), ஆயிஷா (16) ஆகிய நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை இரவு, அப்துல்லாவின் குடும்பத்தினர் ஐந்து உறவினர்களுக்குத் தங்களது வீட்டில் மட்டன் பிரியாணி விருந்து அளித்துள்ளனர். விருந்தினர்கள் சென்ற பிறகு, இரவு 1 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 5 மணி அளவில், குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவராக மயங்கினர். இதையடுத்து உடனடியாக மருத்துவ உதவி நாடியும் பலனின்றி, அடுத்த சில மணிநேரங்களிலேயே நால்வரும் உயிரிழந்தனர்.
ஆரம்பத்தில் இது அசுத்தமான தர்பூசணியால் ஏற்பட்ட "உணவு விஷப்பாதிப்பு" (Food Poisoning) என நம்பப்பட்டது. மருத்துவர்களும் பிரியாணியால் பிரச்சனை இல்லை, ஏனென்றால் அப்துல்லா குடும்பத்தினருடன் அவரது உறவினர்களும் பிரியாணி சாப்பிட்டு அவர்கள் நலமாக இருக்கிறார்கள். இதனால் தர்பூசணி பழத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால், அவர்களது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வேறு சில திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.
அசாதாரண நிறமாற்றம்: உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் பகுதிகளில் அசாதாரணமான பச்சை நிறத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண உணவு நஞ்சாவதால் ஏற்படும் அறிகுறி அல்ல என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
மார்பின் (Morphine) தடயம்: அப்துல்லா டோகாடியாவின் உடலில், வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மிக வீரியமான 'மார்பின்' மருந்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
விஷமே காரணம்: தர்பூசணியை விட, ஏதோ ஒரு வகை விஷம் அல்லது வேதிப்பொருள் உடலில் கலந்ததே மரணத்திற்கு நேரடி காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தடயவியல் சோதனைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தர்பூசணி மீதான சந்தேகம்: உயிரிழப்புகளுக்கும் தர்பூசணிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என FDA தெரிவித்துள்ளது. இருப்பினும், தர்பூசணியில் நச்சுப் பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டிருந்ததா என்பதை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
உறவினர்களிடம் விசாரணை: இரவு விருந்தில் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஐந்து உறவினர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
கோணங்கள்: இது தற்கொலையா, திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்ற கோணங்களில் விசாரணை நீடிக்கிறது. அதிகப்படியான மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணிகள் இதற்கு பின்னணியில் இருக்குமா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்தச் செய்தி பரவியதால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்பூசணி விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. எனினும், இறுதி வேதியியல் பகுப்பாய்வு முடிவுகள் வந்த பின்னரே, இந்த மர்ம மரணங்களுக்கான உண்மையான காரணம் என்ன என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications