கடலில் திடீரென கொதித்து வெளியேறும் தண்ணீர்.. மீனவர்களுக்கு வார்னிங்.. என்ன காரணம்?
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தையொட்டி கடற்கரை பகுதியில் திடீரென்று பூமிக்கடியில் இருந்து கடல்நீர் கொதித்து வெளியேறி வரும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதனை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அரபிக்கடலையொட்டி பால்ஹர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது. இந்நிலையில் தான் குஜராத் - மகாராஷ்டிரா எல்லையோர அரபிக்கடல் பகுதியில் திடீரென்று அரிய சம்பவம் நடந்துள்ளது.
கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் திடீரென்று பூமிக்கடியில் இருந்து கடல்நீர் கொதித்து வெளியேறி வருகிறது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் தண்ணீர் கொதித்து வெளியேறுவதை செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
இந்த இடம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் பாதையாகும். அதுமட்டுமின்றி இந்த இடத்தின் அருகே மீன்பிடி மையம் அமைந்துள்ளது. மேலும் தினமும் ஏராளமான கப்பல்கள் இந்த பாதையின் வழியாக பயணித்து வருகிறது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் பூமிக்கடியில் கியாஸ் கசிவு அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) விசாரணைக்காக தனிக்குழுவை அமைத்துள்ளது. இந்திய கடலோர காவல் படையினர், தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். குஜராத் கடற்கரையை எடுத்து கொண்டால் நிலநடுக்கம் பாதிப்புள்ள பகுதியாகவும், ஹைட்ரேட் சிதைவு போன்ற வேதியியல் மாற்றங்கள் நிகழும் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் முதற்கட்டமாக நிலநடுக்க மண்டலங்களில் பூமிக்கடியில் நிகழும் இயற்கையான மீத்தேன் கசிவு அல்லது மும்பையின் ஹை பகுதியின் எண்ணெய் - எரிவாயு குழாயில் ஏற்பட்ட உடைப்பால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சோனார் மற்றம் கியாஸ் சென்சார்கள் பொருத்தப்பட்ட கப்பல்களை வைத்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பால்ஹர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் விவேகானந்த் கடம் கூறுகையில், ‛‛இந்த கொந்தளிப்பு மிகவும் அசாதாரணமானது. கடல்சார் மற்றுமு் தொழிற்சார் முகமைகள் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். மேலும் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்த வழியாக பயணிக்க வேண்டிய கப்பல்களை மாற்று பாதையில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2024ம்ஆண்டில் வடக்கு கடலில் (North Sea) நீருக்கடியில் எரிமலை வெடிப்பு சம்பவம் நடந்தத. அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications