உறைந்த மும்பை! அமித்ஷாவுக்கு “அச்சுறுத்தல்” -கோப்ரா விக்ரம்போல்.. மாறுவேடத்தில் ஊடுருவிய “மர்ம”நபர்!
மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணத்தின்போது ஆந்திர பிரதேச எம்.பியைபோல் மாறுவேடம் அணிந்து குறுக்கே வந்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோரது வீடுகளுக்கு சென்று பேசினார்.
அத்துடன் லால்பாக் ராஜா மற்றும் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை அமித்ஷா தரிசனம் செய்தார். மகாராஷ்டிரா அரசியல் நிலவரம், மற்றும் மும்பை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மாறுவேட நபர்
இந்த நிலையில் மும்பையில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேச எம்.பியின் உதவியாளர்போல் வேடமணிந்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டு ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயரை ஹேமந்த் பவார் என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மலபார் ஹில் போலீசார், 5 நாள் காவலில் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட நபர் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வீட்டுக்கு வெளியிலும் தென்பட்டு இருப்பதாக கூறி இருக்கின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே வீடு
மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிபவரைபோல ரிப்பன் டேக் வைத்துக்கொண்டு மாறுவேடம் அணிந்து ஏக்நாத் ஷிண்டே வீட்டு வாசலில் அவர் நின்றதாக தெரிவித்துள்ளனர். அமித்ஷா வருகையின்போது பாதுகாப்புக்காக நின்றவர்களின் பெயர்களை கேட்டு போலீசார் சோதனையிட்டபோது ஹேமந்த் பவாரின் பெயர் தங்களின் பட்டியலில் இல்லாததால் போலீசார் சந்தேகமடைந்து கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ் நிறுத்தம்
முன்னதாக மும்பையில் அமித்ஷாவின் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஆம்புலன்ஸ் சாலையை கடந்து செல்ல முடியாமல் சைரனை ஒலித்துக்கொண்டே காத்திருந்தது சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், அந்த ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லை என்று மும்பை போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்தனர்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications