"எந்த விலை கொடுக்கவும் ரெடி!" பட்டுனு சொன்ன சரத் பவார்! உற்று நோக்கும் தேசிய தலைவர்கள்! என்ன மேட்டர்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்கக் கூடும் எனச் சொல்லப்படும் நிலையில், இது குறித்து சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதையே முக்கிய தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அப்படி தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்கும் மூத்த தலைவராக சரத் பவார் இருப்பார் என கருதப்படுகிறது.. அதேநேரம் மற்றொரு பக்கம் மகாராஷ்டிராவில் என்சிபி உடன் கூட்டணி அமைக்க பாஜக முயல்வதாகவும் அதற்கு சரத் பவார் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே என்சிபி மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீலிடம் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தனர். ஆளும் தரப்பினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய மறுத்ததன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். என்சிபி கட்சியினர் கஷ்டப்படுவார்கள் என்ற போதிலும் தங்கள் பாதையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டார்கள் என்று சரத் பவார் கூறினார்.
எந்த விலை கொடுக்கவும் ரெடி: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இப்போது இருக்கும் அரசு என்சிபி கட்சியைச் சேர்ந்த 9-10 தலைவர்களிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்காக என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் தயாராக இருக்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்.
சிலரால் என்சிபியின் நிலைப்பாட்டை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தொல்லை தருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.. எங்கள் கட்சியில் இருந்து விசாரணையை எதிர்கொண்ட முக்கிய தலைவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. இதில் பல குற்றச்சாட்டுகள் பொய்யான மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
எங்கள் மீதான இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். மக்கள் இது குறித்துக் கேள்விப்படும்போது அதிர்ச்சியடைகிறார்கள். இருப்பினும், உண்மை என்னவென்று மக்களுக்கும் விரைவாகப் புரிந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
விசாரணை: என்சிபி கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் இப்போது விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். அக்கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான தேஷ்முக் பணமோசடி வழக்கில் நவம்பர் 2021இல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது குறித்து சரத் பவார் கூறுகையில், "தேஷ்முக் கல்வி நிறுவனம் ஒன்றிடம் இருந்து 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.
இருப்பினும், விசாரணையில் அது 100 கோடி இல்லை 1.5 கோடி என்பது தெரிய வந்தது. திட்டமிட்டு இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். முதலில் பொய்யாகப் பரவும் இந்த 100 கோடி என்பது மக்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகவே இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தேஷ்முக் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் இப்போது பாஜக- ஷிண்டே தரப்பிலான சிவசேனாவுடன் கூட்டணியில் இருக்கிறது. ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க வழக்கு நடந்து வரும் நிலையில், அங்கே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்சிபி உடன் கூட்டணி அமைக்க பாஜக முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு சரத் பவார் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட சில என்சிபி தலைவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவே கூறப்படுகிறது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications