துணை முதல்வர் பதவியில் இருந்து விலகிய அஜித் பவார்.. என்சிபி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மீண்டு(ம்) வந்த அண்ணன் அஜித்பவாரை கட்டி தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே

    மும்பை: துணை முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு முதல்முறையாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.

    மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைப்பதற்காக கடந்த வாரம் பாஜகவுடன் கைகோர்த்த என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார், ஆனால் பின்னர் அதை விட்டு விலகினார், இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தனது கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    NCP leader Ajit Pawar attended a meeting of his party MLAs here on Wednesday

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பு விழாவை முன்னிட்டு, ஒய் பி சவான் மையத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மகாராஷ்டிரா என்.சி.பி தலைவர் ஜெயந்த் பாட்டீல், கட்சியின் மூத்த தலைவர்கள் சாகன் பூஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அக்டோபர் 21 ம் தேதி நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் புனேவின் பரமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அஜித் பவார், கடந்த சனிக்கிழமை பாஜகவுடன் கைகோர்த்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வராகி தனது கட்சியையும் குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

    "தனிப்பட்ட காரணம்" என்று கூறி அஜித் பவார் செவ்வாய்க்கிழமை துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், அதைத் தொடர்ந்து ஃபட்னவிஸும் முதல்வர் பதவியில் இருந்து விலகினார், இது பாஜக தலைமையிலான அரசாங்கம் மகாராஷ்டிராவில் வீழ்வதற்கு வழிவகுத்தது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+