பாபா சித்திக் கொலையால் பயந்து கிடக்கும் பாலிவுட்.. அமிதாப் பச்சன் செய்த சேட்டையை பாருங்க!
மும்பை: பிரபல என்சிபி தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட செய்தி நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் உலகம் முழுவதும் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த துயரமிகு தருணத்தில் நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த ஒரு புகைப்படம் ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது, மற்றும் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
பாபா சித்திகி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுடன் மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கு பல பிரபலங்கள் வந்தனர். குறிப்பாக, நடிகர் சல்மான் கான் மிகவும் உடைந்து போய் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த நேரத்தில் அமிதாப் பச்சன் தனது சமூக வலைதள பக்கத்தில், தலையில் கை வைத்து தன் முடிகளை சீர்செய்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை புன்னகையுடன் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்தப் பதிவு ரசிகர்களின் கோபத்தை கிளப்பி உள்ளது.
புகைப்படத்துடன், "முடி சீர்செய்யும் போது" என்ற கமெண்ட் போட்டுள்ளார் அமிதாப். இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி, பலர் அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஒரு ரசிகர், "உங்களை நாங்கள் மதித்தோம், ஆனால் இனி இல்லை," என்று எழுதியுள்ளார். மற்றொரு ரசிகர், "பாபா சித்திகி உயிரிழந்திருக்கிறார், ஆனாலும் இவருக்கு இது தான் முக்கியமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒருவர், "இப்படியான தருணத்தில் மக்களுடன் கைகோர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டிய ஒருவர் இப்படி செயல்படுகிறாரா?" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, பாபா சித்திகி தனது மகனின் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் காரில் ஏறியவுடன் அவரை குறிவைத்து சில நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
இந்த கொலையில் பாலிவுட் மட்டுமின்றி நாட்டு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சல்மான் கானும் பாபா சித்திகியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது சல்மானுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான ஆலோசனையும் மும்பை போலீஸார் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வு பாலிவுட்டின் அரசியல் தொடர்புகளை பற்றிய புதிய விவாதங்களை தூண்டியுள்ள நிலையில், அமிதாப் பச்சனின் செயல்பாடு மீதும் கேள்விகள் எழுந்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications