ஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம்
ஆறு மாத குழந்தையின் தாய் என்றும் பாராமல் தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளான் ஒரு கொடூரன். மறுத்த அந்த பெண்ணின் தலையை பிளந்து கொலை செய்து விட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறான்.
மும்பை: மும்பை போன்ற பெருநகரங்களில் தனியாக இருக்கும் பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு இல்லைதான் போல. கணவன் வேலைக்குப் போன பின்னர் ஆறு மாத கைக் குழந்தையோடு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து கொலை செய்திருக்கிறான் ஒரு கொடூரன். தப்பி ஓடினாலும் கடைசியில் போலீஸ் பிடியில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறான்.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சிந்தாவதி என்பதாகும். மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் தனது கணவனோடு வசித்து வந்த அவரைத்தான் கொலை செய்திருக்கிறான்.
வழக்கம் போல அன்றும் வேலைக்கு போய் விட்டு திரும்பிய சிந்தாவதியின் கணவன் அதிர்ச்சியடைந்தான். காலையில் தனக்கு டாடா காட்டி வேலைக்கு அனுப்பிய மனைவி சிந்தாவதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்தால் யாருக்குத்தான் மயக்கம் வராது. ஏன் இப்படி இந்த பாதக செயலை செய்தவர் யார் என்று பதறிப்போய் போலீசில் தகவல் சொன்னார்.

கொலையாளி சிக்கினான்
போலீசும் தங்களது பாணியில் விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த வீட்டிற்கு யார் யார் வந்தார்கள் என்று புலனாய்வு செய்ததில் பக்கத்து வீட்டுக்காரன் நிகில் வந்து போயிருக்கிறான் என்று தெரியவந்தது. அவனை முதலில் சாதாரணமாக விசாரித்ததில் எதுவும் பேசாமல் முரண்டு பிடித்தான். ஆனால் அவனது கண்களில் தெரிந்த கள்ளத்தனம் போலீசை உறுத்தியது. அவனது பேச்சும் மாறி மாறி வரவே, தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கினர். வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டான்.

கொன்றது ஏன்
போலீஸ் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. திருமணமாகி சிந்தாவதி பக்கத்து வீட்டிற்கு வந்ததில் இருந்தே அவளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஓரப்பார்வையில் அவளை ரசித்து வந்த நிகிலுக்கு ஒருமுறையாவது ருசிக்க ஆசைதான். நாளாக நாளாக அது வெறியாக மாறியது.

கொலைக்கு காரணம்
சிந்தாவதிக்கு குழந்தை பிறந்த பின்னரும் விடாமல் விரட்டியுள்ளான். கணவன் வேலைக்குப் போகும் நேரத்தை கணக்கிட்டு வீட்டுக்குள் புகுந்த அவன், சிந்தாவதியை உறவுக்கு கட்டாயப்படுத்தினான். ஆனால் சிந்தாவதி உறவுக்கு மறுத்து அவனை திட்டி அடித்துள்ளாள். உடனே கோபம் தலைக்கு ஏறியது. வெறியோடு கையில் இருந்த கத்தியால் குத்தினான்.

தலையில் அடித்துக்கொலை
சிந்தாவதி உயிர் பிழைத்தால் காட்டி கொடுத்து விடுவாளே என்ற பயம் அதிகரித்து, சுத்தியலை எடுத்து தலையில் ஒரே போடாக போடவே மயங்கி சரிந்தாள் சிந்தாவதி. எதுவுமே தெரியாதது போல வீட்டுக்கு போய் விட்டான் நிகில் தவறு செய்தவன் தப்பிக்க முடியாது என்பது உண்மை. அதுபோலவே போலீசில் சிக்கிக்கொண்டான். நிகிலை கைது செய்த போலீசார் அவனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications