Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

61 வயதிலும் இளமை! "இந்த" இரண்டை மட்டும் செய்யுங்க போதும்.. சீக்ரெட் பகிர்ந்த நீதா அம்பானி! ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

மும்பை: நமது நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர் ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானி. இவர் தனது அறக்கட்டளை சார்பாக பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார். 61 வயதானாலும் கூட இவர் இன்னுமே இளமையாகவே இருப்பார். இதற்கிடையே எப்படி இந்தளவுக்கு இளமையாக இருக்க முடிகிறது என்ற சீக்ரெட்டை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் டாப் பணக்காரரும் உலக பணக்காரர்கள் லிஸ்டில் முக்கிய இடத்திலும் இருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவர் பெட்ரோலியும், டெலிகாம், சில்லறை வர்த்தகம் என பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். தந்தை திருபாய் அம்பானி விட்டுச் சென்ற தொழில் சாம்ராஜ்யத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.

Nita Ambani offbeat health

நீதா அம்பானி

அவரது மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவராக உள்ளார். பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் அவர் இந்தியாவின் பவுர்புல்லான பெண்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு இப்போது வயது 61 ஆகிறது. ஆனால், அவரை பார்க்கும் யாருமே அவ்வளவு வயதாகிவிட்டது என்றால் நம்பமாட்டார்கள். அந்தளவுக்கு உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டு ஃபிட்னஸை பராமரித்து வருகிறார். பெண்கள் தங்கள் உடல்நிலைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கு முன்மாரியாகத் திகழ்கிறார்

நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நீதா அம்பானி தனது ஃபிட்னஸ் மற்றும் உணவு பழக்கவழக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 60 வயதுக்குப் பிறகு பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக விரிவான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

பெண்கள் உடல்நிலை

அதில் அவர், "பெண்கள் எப்போதும் தங்கள் குடும்பத்தினர் அல்லது வேலைக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களுக்காக எதையும் செய்து கொள்வதில்லை. தங்களின் நலனை அவர்கள் கடைசியாகவே வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், குறிப்பாக 50, 60 வயதைத் தாண்டிவிட்டால் நாம் நமது ஆரோக்கியத்தையும் உடலையும் கவனித்துக்கொள்வது முக்கியம்.

30 வயதிற்குப் பிறகு, பெண்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சுமார் 3-8% தசையை இழக்கிறார்கள். இதனால் வயதாகும் செயல்முறை வேகமாகிறது. தசை, எலும்பு அடர்த்தி, வலிமை என எல்லாம் மெல்ல குறைகிறது. நமது வளர்சிதை மாற்றம் மற்றும் சகிப்புத்தன்மை குறைகிறது" என்றார்.

சீக்ரெட் 1

தொடர்ந்து தனது உடற்பயிற்சிகள் குறித்துப் பேசிய அவர், "நான் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 அல்லது 6 நாட்கள் உடற்பயிற்சி செய்வேன். கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது எனக்கு பிடிக்கும். நான் 6 வயது முதலே பரதநாட்டியம் ஆடி வருவதால் எனக்கு வலிமையான கால்கள் உள்ளன. அதேநேரம் மற்ற உடல் பாகங்களுக்கும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வேன்.

யோகா மற்றும் வலிமை ஆகியவை தான் எனது உடற்பயிற்சியின் முக்கிய பகுதி. சில நாட்கள் நீச்சல் உள்ளிட்ட நீர் பயிற்சிகளையும் செய்வேன்.. சில நாட்களில் ஒரு மணி நேரம் வரை நடமாடுவேன்.. இது தவிர ஒவ்வொரு நாளும் குறைந்தது 5,000-7,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பேன். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் எண்டோர்பின் ரிலீஸ் ஆகிறது. இது அன்றைய நாள் முழுக்க நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது" என்கிறார்.

சீக்ரெட் 2

கடைசியாகத் தனது உணவு முறைகள் குறித்துப் பேசும் நீத்தா, "நான் சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்வேன். நான் சைவம். மேலும், எனது உணவு இயற்கையாக விளைவிக்கப்படுவதை உறுதி செய்வேன். உணவில் கட்டாயம் புரதச்சத்துகளைச் சேர்த்துவிடுவேன். மேலும் சர்க்கரை உணவில் மொத்தமாகத் தவிர்த்துவிடுவேன்" என்றார். சைவமா அசைவமா என்பது முக்கியமல்ல சமச்சீரான உணவுகள் முக்கியம். சர்க்கரையைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அதாவது தினசரி உடற்பயிற்சி செய்வதும்.. சத்தான உணவுகளைச் சரிவர எடுத்துக் கொள்வதுமே அவரது ஃபிட்னஸ் சீக்ரெட்டாக இருக்கிறது. இந்த 2ஐ மட்டும் செய்தால் போதும் எப்போதும் இளமை தான்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+