தற்கொலை கடிதம் இல்லை.. வேறு முக்கிய காரணம் இருக்கலாம்.. சுஷாந்த் சிங் மரணம்.. போலீசின் புதிய கோணம்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளும் முன் அது தொடர்பாக கடிதமோ அல்லது தகவலோ எதையும் விட்டு செல்லவில்லை.

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளும் முன் அது தொடர்பாக கடிதமோ அல்லது தகவலோ எதையும் விட்டு செல்லவில்லை. இதுதான் மும்பை போலீசாரை குழப்பி இருக்கிறது.

Recommended Video

    Sushant Singh Rajput மரணம்..குழம்பியிருக்கும் Mumbai Police

    யாருக்கு எப்போது மரணம் வரும் என்று தெரியாது.. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் என்று வரிசையாக பிரபலங்கள் மரணம் அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

    பூட்டை உடைத்தனர்

    பூட்டை உடைத்தனர்

    இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அந்த விசாரணை குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. சரியாக மதியம் 12 மணிக்கு பின்தான் நேற்று சுஷாந்த் சிங் உடலை அறையில் இருந்து வெளியே எடுத்து இருக்கிறார்கள். அவர் போன் அடித்தும் எடுக்கவில்லை. அதேபோல் சாப்பிடவும் வரவில்லை. கதவை திறக்கவில்லை என்றதும் பூட்டை உடைத்து உள்ளனர்.

    எவ்வளவு நேரம் முயன்றனர்

    எவ்வளவு நேரம் முயன்றனர்

    சுமார் 1 மணி நேரம் முயன்று பூட்டை உடைத்து இருக்கிறார்கள். இதற்காக பூட்டை உடைக்கும் நபரை வரவைத்துள்ளனர். உள்ளே அறையில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அவர் அப்போது குர்தா அணிந்து இருந்துள்ளார். அதன்பின் அவரின் உடலை கீழே இறக்கி வைத்துவிட்டு, போலீசார் மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     எதுவுமே கிடைக்கவில்லை

    எதுவுமே கிடைக்கவில்லை

    இதில் கவலை அளிக்க கூடிய விஷயம் என்று பார்த்தால், சுஷாந்த் சிங் வீட்டில் சந்தேகம் அடையும் வகையில் எதுவும் இல்லை. அதாவது சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு உள்ளே எதுவும் இல்லை. ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறி உள்ளனர்.

    கடிதம் இல்லை

    கடிதம் இல்லை

    அதேபோல் அந்த அறையில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அதாவது சுஷாந்த் சிங் எழுதிய தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் சாகும் முன் அதை பற்றி யாரிடமும் பேசவும் இல்லை. தன்னுடைய மரணம் குறித்த காரணம் யாருக்கும் தெரிய கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்துள்ளார். சுஷாந்த் சிங் இதை திட்டமிட்டு செய்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    வேறு காரணம்

    வேறு காரணம்

    அதே சமயம் இவருக்கு பொருளாதார ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதாவது பொருளாதார ரீதியாக சுஷாந்த் சிங்கிற்கு ஏதாவது சிக்கல் இருந்து இருக்கலாமா என்று விசாரித்து வருகிறார்கள். அதே சமயம் பட ரீதியா எதாவது பிரச்சனை வந்து இருக்கலாமா, வேறு எங்கிருந்தாவது அழுத்தம் வந்து இருக்கலாமா என்றும் புதிய கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+