Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்பா என்னா அழகு... அவரோட பொண்ணா இது.. செம்ம டான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகையான கஜோல் மற்றும் அஜய் தேவ்கனின் மகளான நைசா தேவ்கனின் டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

பாலிவுட் நடிகையான கஜோலை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பிரபல பாலிவுட் நடிகையான தனுஜாவின் மகளான கஜோல் 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர்.

இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பாலிவுட் படம் பாஸிகர் இவருக்கு பெரியளவில் பெயரை பெற்று தந்தது. அதை அடுத்து பல படங்களில் நடித்து இன்று வரை தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

 மின்சார கனவில் அறிமுகம்

மின்சார கனவில் அறிமுகம்

"மின்சார கனவு" என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவருக்கு தனிஷா என்ற தங்கையும் உள்ளார். இவரும் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த "உன்னாலே உன்னாலே" என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கஜோல் 2017 ஆம் ஆண்டு விஐபி 2 படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

 காதல் திருமணம்

காதல் திருமணம்

1999 ஆம் ஆண்டு தன காதல் கணவர் அஜய் தேவ்கனை மணந்தார். இவர்களுக்கு நைசா என்ற பெண் குழந்தையும் யுக் என்ற ஆன் குழந்தையும் உள்ளனர். இதில் நைசா சிங்கப்பூரில் படித்து வந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியாவிற்கு வந்து தற்போது தன் பெற்றோர்களுடன் இருக்கிறார்.

 டான்ஸ் வீடியோ

டான்ஸ் வீடியோ

தற்போது நைசா தான் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது தோழிகளுடன் நடனம் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன் தோழிகளுடன் தன்னுடய அம்மா கஜோல் நடித்த "கபி குஷி கபி கம்" படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற "போலே சூடியான்" பாடலுக்கு நடனமாடுகிறார். மேலும் அந்நிகழ்ச்சியில் தன்னுடய அம்மா நடித்த பல பாடல்களுக்கும் அற்புதமாக நடனமாடி அசத்தியிருக்கிறார். இந்த நடன நிகழ்ச்சியில் சிங்கப்பூர் மாணவிகளும் நைசாவும் இந்திய உடை உடுத்தி நடனம் ஆடியிருப்பது மேலும் அழகை கூட்டியிருக்கிறது.

 குட்டி கஜோல் நைசா

குட்டி கஜோல் நைசா

நைசா பார்ப்பதற்கு குட்டி கஜோலை போலவே உள்ளார். 17 வயதாகும் நைசாவுக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று ஏற்கனவே கஜோலும் அஜய் தேவ்கனும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அஜய் தேவ்கனும் அவ்வப்போது தன்னுடைய மகன் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+