மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி.. ஷிண்டே பிடிவாதத்திற்கு நடுவே.. அதிரடியாக அறிவித்த பாஜக!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு? என்பதில் பாஜக கூட்டணிக்குள் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையிலும், பாஜக - சிவசேனா இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இத்தகைய சூழலில் புதிய அரசு பதவியேற்கும் தேதியை பாஜக வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஷிண்டே), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரமாண்ட வெற்றியை வெற்றது. மொத்தம் உள்ள 288 இடங்களில், மகாயுதி கூட்டணி மட்டும் 233 இடங்களில் வெற்றி பெற்றது. மகாயுதி கூட்டணியில் பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றது.

சிவசேனா 57 இடங்களிலும், என்.சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது. பாஜக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி இருந்தாலும் முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக - சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டது. இந்த ரேசில் அஜித் பவார் கட்சி ஒதுங்கி கொண்டது. ஆனாலும் ஷிண்டே முதல்வர் பதவியை பெறுவதில் தீவிரம் காட்டினார். பாஜகவும் இந்த முறை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தது.
இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டே சென்ற நிலையில், டெல்லியில் பாஜக உயர் மட்ட தலைவர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா எடுக்கும் முடிவை ஏற்க இருப்பதாக அறிவித்தார். இதனால், இழுபறி முடிவுக்கு வரும் என்று எதிபார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை இலாகா பெறுவதில் இழுபறி நீடித்தது. முக்கிய துறைகளை ஏக்நாத் ஷிண்டே கேட்டதால் இந்த விவகாரத்தில் இன்னமும் ஒருமித்த உடன்பாடு எட்டப்படவில்லை.
முதல்வர் பதவி தங்கள் கட்சிக்கு வேண்டும், இல்லாவிட்டால் உள்துறை, நிதி இலாகாக்களையும், சபாநாயகர் பதவியையும் தாருங்கள் என ஷிண்டே கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனை நிறைவேற்ற முடியாவிட்டால் பாஜக தலைமையில் அமைய இருக்கும் கூட்டணி அரசுக்கு இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அமித்ஷாவிடம் ஷிண்டே கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பாஜக உடன்படவில்லை என சொல்லப்பட்டது.
இத்தகைய பரபரப்புக்கு நடுவே, மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 5 ஆம் தேதி மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். எனினும் முதல்வர் பதவி தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications