மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி விமர்சித்த ராமர் பாலம் உண்மையா? கட்டுக்கதையா? பரபரப்பை கிளப்பும் ராம் சேது டீசர் ரிலீஸ்

Google Oneindia Tamil News

மும்பை: தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் ராமர் பாலம் என்பது உண்மையானதா? கட்டுக் கதையா? எனபதை அலசும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ராம் சேது - Ram Setu இந்தி திரைப்பட்த்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில் தமிழ்நாட்டின் பாம்பன் தீவுகள் தொடங்கி இலங்கை வரை தொடர்ச்சியான மணல் அல்லது சுண்ணாம்பு திட்டுகள் இருக்கின்றன. இது பாலம் போல ஒரு தொடர்ச்சியான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. இது ஆதாம் பாலம் அல்லது ராமர் பாலம் என புராணங்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டு வருகிறது.

கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்.. மத்திய அரசு முதற்கட்ட அனுமதி..அடுத்தது என்ன?கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்.. மத்திய அரசு முதற்கட்ட அனுமதி..அடுத்தது என்ன?

 சேதுக்கால்வாய் திட்டம்

சேதுக்கால்வாய் திட்டம்

ராமாயண கதைகள் அடிப்படையில், ராமர் இலங்கைக்கு செல்வதற்காக குரங்குகள் எனப்படும் வானரங்கள் உதவியுடன் கட்டப்பட்டதுதான் இந்த பாலம்; ஆகையால் இது ராமர் பாலம்- ராம் சேது என்கின்றனர் இந்துத்துவா ஆதரவாளர்கள். இந்த மணல் திட்டுகளை அகற்றி சேதுக்கால்வாய் திட்டம் ஒன்றை செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகள் எடுத்தது. ஆனால் ராமர் கட்டிய பாலம் என்பதால் இதனை இடித்து தள்ளக் கூடாது என சேதுக் கால்வாய் திட்டத்தை முடக்கவும் செய்தனர் சுப்பிரமணியன் சுவாமி போன்ற இந்துத்துவா ஆதரவாளர்கள். சேதுக்கால்வாய் திட்டம் அமைந்தால் இந்திய பெருங்கடல் வழியாக கொழும்பை சுற்றி செல்லாமல் சரக்கு கப்பல்கள் எளிதாக மன்னார் வளைகுடா வழியாகவே வங்க கடலில் பயணிக்க முடியும். ஆகையால் சேதுக்கால்வாய் திட்டம் முக்கியத்துவம் என வாதிடப்பட்டது.

 கருணாநிதி எழுப்பிய கேள்வி

கருணாநிதி எழுப்பிய கேள்வி

சேதுக்கால்வாய் திட்ட சர்ச்சையின் போதுதான், கடவுள் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது கருணாநிதியின் தலைக்கு சில இந்துத்துவா சாமியார்கள் விலை வைத்த சம்பவங்களும் நடந்தன. தற்போது ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தி நிலுவையில் உள்ளது.

 ராம் சேது டீசர்

ராம் சேது டீசர்

இந்தப் பின்னணியில் ராமர் பாலம் உண்மையா? கட்டுக்கதையா? என்பதை அடிப்படையாக வைத்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், நடிகை ஜாக்குலின் நடிப்பில் ராம் சேது -Ram Setu திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் தொல்லியல் ஆய்வாளராக நடிக்கிறார். இத்திரைப்படம் குறித்து சந்தேகங்கள் எழுப்பி ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

 என்ன எதிர்வினைகள்?

என்ன எதிர்வினைகள்?

இந்நிலையில் இன்று ராம் சேது திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 25-ந் தேதி முதல் திரைக்கு வர உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் பஞ்சாயத்தைக் கூட்டி வரும் நிலையில் சர்ச்சைக்குரிய ராம் சேது படம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறதோ?

English summary
Official Teaser of Akshay Kumar's Ram Setu released today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X