"அரசியல் தற்கொலை.." பாஜகவுடன் இணைந்தாலே அவ்வளவு தான்.. சரத் பவார் தந்த வார்னிங்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: என்சிபி கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத் பவார் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக சரத் பவார் உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அங்கே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.

மகாராஷ்டிராவில் தொங்கு சட்டசபை அமைந்த போது, சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய இவர் முக்கிய காரணமாக இருந்தார். அடுத்து 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முகமாக சரத் பவார் இருப்பார் என்று கூறப்படுகிறது.

 Political Suicide is the answer from Sharad Pawar On Buzz Around Joining hand with BJP

சரத் பவார்: இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றி சரத் பவார் பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் அதானி விவகாரத்தைக் கடுமையாகச் சாடி வரும் நிலையில், அதில் அதானிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். அதேபோல பிரதமர் மோடியின் டிகிரி சான்றிதழ் குறித்து சிலர் தேவையில்லாமல் கேள்வி எழுப்புவதாகவும் அது நாட்டிற்குத் தேவையில்லாத ஒன்று என்றும் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே சிவசேனா (தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், சரத் பவார் சமீபத்தில் உத்தவ் தாக்கரேயிடம் கூறியதாக சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது தனது கட்சியில் யார் என்ன சொன்னாலும் பாஜகவுடன் தங்கள் கட்சி ஒருபோதும் கைகோர்க்காது என்று சரத் பவார் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

மறுப்பு: கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சம்னாவில் அவர் இவ்வாறு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் மாநிலத்தில் ஆளும் பாஜகவுடன் கைகோர்க்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதை சரத் பவார் திட்டவட்டமாக மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல அஜித் பவாரும் இதுபோன்ற தகவல்கள் ஆதாரமற்றது என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மும்பையில் சந்தித்தாக வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

சஞ்சய் ராவத் தனது கட்டுரையில், "கடந்த செவ்வாய்க்கிழமை சரத் பவார் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். அப்போது யாரும் கூட்டணியில் இருந்து வெளியேற விரும்பவில்லை என்று உத்தவ் தாக்கரேயிடம் அவர் கூறினார். யாரேனும் வெளியேற முடிவு எடுத்தால், அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.. ஆனால் ஒரு கட்சியாக நாங்கள் ஒருபோதும் பாஜகவுடன் செல்ல மாட்டோம்.

ரசியல் தற்கொலை: தற்போதைய மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிர மக்கள் மத்தியில் கோபம் உள்ளது. பாஜகவில் சேரும் நபர்கள் அரசியல் தற்கொலை செய்து கொள்வதாகவே அர்த்தம் என்று அவர் தெரிவித்தார். கட்சி மாறி செல்வர்கள் குறித்த அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ கோப்புகளைத் தள்ளி வைத்து விடுவார்களே தவிர அதை அவர்கள் ஒரு போதும் க்ளோஸ் செய்ய மாட்டார்கள் என்றும் சரத் பவார் தெரிவித்தார்" என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுளளார்.

 Political Suicide is the answer from Sharad Pawar On Buzz Around Joining hand with BJP

ஷிண்டே தலைமையிலான 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தான், அஜித் பவார் அவர்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்று தகவல் வெளியானது. ஏனென்றால், அஜித் பவாரின் குடும்பத்துக்குச் சொந்தமான சர்க்கரை ஆலையில் சமீபத்தில் தான் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, பண மோசடி நடந்துள்ளதாக வழக்குப் போட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார்கள்: அதற்கேற்ப ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் தாதா பூஸ், "அஜித் பவார் பல ஆண்டுகளாக என்சிபியில் இருந்தாலும், அவர் அங்கே அமைதியற்று இருந்து வருகிறார். இது அனைவருக்கும் தெரியும். எனவே, வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் அஜித் பவார், "288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சுயேச்சைகளுக்கு 115 எம்எல்ஏக்கள் உள்ளனர்.. 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் தற்போதைய ஆட்சியில் 149 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்டசபையின் பலம் 272 ஆக இருக்கும் என்பதால், அவர்களின் ஆட்சிக்குப் பாதிப்பு ஏற்படாது. இதனால் தான் சொல்கிறேன். இங்கே யாருக்கும் கட்சி மாறும் எண்ணம் எல்லாம் இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+