என் பெற்றோரின் நீண்ட கால கனவை நனவாக்கும் ஆனந்த் மகிந்திராவுக்கு நன்றி.. பிரக்ஞானந்தா ட்வீட்
மும்பை: செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு காரை பரிசளிக்கவுள்ளதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ள நிலையில் தனது பெற்றேரின் கனவை நனவாக்கியுள்ளீர்கள் என பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் 18 வயது பிரக்ஞானந்தா. இவர் வேலம்மாள் பள்ளியில் படித்து வருகிறார். இவரது தந்தை ரமேஷ் பாபு. தாய் நாகலட்சுமி. இவர்தான் தனது மகனை அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று இன்று இந்த உயரத்தை அடைய உறுதுணையாக நிற்கிறார்.

அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் கடந்த வாரம் உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வி அடைந்தார். கடைசி வரை இவர் உலக சாம்பியன் ஆவார் என எதிர்ப்பு இருந்த நிலையில் தோல்வி அடைந்தார்.
எனினும் இந்த சிறிய வயதில் இறுதி போட்டி வரை வந்ததே இந்தியாவுக்கு பெருமையான விஷயம்தான். அதிலும் தமிழகத்திற்கு பெரும் பெருமையை சேர்த்துவிட்டார். இவருக்கு பரிசுத் தொகையாக 66 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பிரக்ஞானந்தாவுக்கு காரை பரிசளிக்கலாமே என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ் யூவி 400 இ.வி. காரை பரிசாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரக்ஞானந்தாவுக்கு பலரும் காரை பரிசளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களது உணர்வு எனக்கு புரிகிறது. ஆனால் என்னிடம் மற்றொரு யோசனா உள்ளது. வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
இது எலக்ட்ரிக் கார்களை போலவே நம் பூமிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் முதலீடு ஆகும். எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ் யூவி 400 இ.வி. காரை பரிசளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ராஜேஷ் (மகிந்திரா குரூப் சிஇஓ) பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ் பாபு ஆகியோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்து அயராத ஆதரவை தந்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதற்கு மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பிரக்ஞானந்தாவின் சாதனைக்கு வாழ்த்துகள். அவருடைய பெற்றோருக்கு கார் பரிசாக கொடுக்க முன் வந்தமைக்கு ஆனந்த் மகிந்திராவுக்கு நன்றி. எலக்ட்ரிக் எக்ஸ்யூவி 400 காரை எங்கள் குழுவினர் டெலிவிரி செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பிரக்ஞானந்தா சென்னை வந்தடைந்தார். அவருக்கு விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் ஆனந்த் மகிந்திரா கார் தருவதாக அறிவித்துள்ளமைக்கு பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துயுள்ளார். இதுகுறித்த பிரக்ஞானந்தா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பெற்றோருக்கு எலக்ட்ரிக் வாகனம் வைத்திருக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவாகும். அந்த கனவை நிறைவேற்றித் தரும் ஆனந்த் மகிந்திராவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications