வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.. முகமெல்லாம் பூரிப்பு!
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தில்சே எனும் ஹிந்தி படத்தில் ஷாரூக்கானுடன் நடித்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த படத்திற்கு இரு தேசிய விருதுகளும் 7 பிலிம்பேர் விருதுகளும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு விருதும் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்களை பெற்றார். இதையடுத்து அதே படம் தமிழில் உயிரே எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதன் பின்னர் இந்தி படங்களில் நடித்து வந்த ப்ரீத்தி கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த நீண்ட கால நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் ப்ரீத்தி.

இரட்டை குழந்தைகள்
இந்த நிலையில் ப்ரீத்தி மற்றும் ஜீன் குட் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் வாடகைத் தாயின் மூலம் இந்த குழந்தையை பெற்றனர். மகிழ்ச்சியான இந்த செய்தியை ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் அனைவருக்கும் வணக்கம், இன்று உங்கள் அனைவருடனும் அற்புதமான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

உற்சாகம்
எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட் இனாஃப், மற்றும் ஜியா ஜிந்தா குட் இனாஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் நானும் ஜீனும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். எங்கள் இதயங்கள் மிகவும் நன்றியுடனும், மிகுந்த அன்புடனும் நிரம்பியுள்ளன. எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.

உற்சாகம்
எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட் இனாஃப், மற்றும் ஜியா ஜிந்தா குட் இனாஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் நானும் ஜீனும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். எங்கள் இதயங்கள் மிகவும் நன்றியுடனும், மிகுந்த அன்புடனும் நிரம்பியுள்ளன. எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.

நன்றி
இந்த நம்ப முடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகைத் தாய் ஆகியோருக்கு நன்றி- அன்புடன் ஜீன், ப்ரீத்தி ஜெய் மற்றும் கியா என தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் ப்ரீத்தி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார்.

பஞ்சாப் ஐபிஎல்
நடிகையும் பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு 20ஆவது முறையாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துபாயில் இருந்த நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் தனிமைப்படுத்துதல் குறித்த தனது அனுபவங்களை நெட்டிசன்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications