எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டிய இளவரசர் வில்லியம்.. பின்னாடி பிரபலம் யார் தெரியுதா? உலகமே கவனித்த மஹிந்திரா

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மும்பையில் ஆட்டோ ஓட்டியுள்ளார். இந்தியாவில் தயாரான அந்த மின்சார ஆட்டோவை ஓட்டியபோது பயங்கர குஷியுடன் காணப்பட்டனர். இதில் இன்னொரு ஆச்சரியம், அந்த ஆட்டோவை தயாரித்த நிறுவனத்துக்கே சர்வதேச விருதும் கிடைத்துள்ளது. வில்லியம் இந்த ஆட்டோவை ஓட்டியபோது, பின்னாடி உட்கார்ந்து வந்தது யார் தெரியுமா?

3 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார்கள் வில்லியம் - கேட் தம்பதியினர்.. நவம்பர் 17-ம் தேதி மும்பையில் நடைபெற்ற எர்த்ஷாட் பரிசு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Prince William India Visit Mahindra UDO Earthshot Prize 2026 UDO

அப்போது மஹிந்திரா நிறுவனத்தின் UDO என்ற எலக்ட்ரிக் ஆட்டோவில் தம்பதி இருவருமே வந்தனர். முதலில் கேட் மிடில்டனுக்காக வில்லியம் கதவைத் திறந்துவிட்டார். பிறகு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து அவரே ஆட்டோவை ஓட்டினார். கேட் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார்.

ஆட்டோ ஓட்டிய இளவரசர் வில்லியம்

ஆட்டோ ஓட்டிய அனுபவம் குறித்து வில்லியம் சொல்லும்போது, "ஆட்டோ ஓட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.. இன்னும் கொஞ்ச தூரம் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்தது.. இந்த ஆட்டோ இன்னும் எவ்வளவு வேகமாக போகும்? என்று அதன் அதிகபட்ச வேகத்தைப பார்க்க ஆர்வமாக இருந்தேன்..

ஆட்டோ ஓட்டி முடித்து கீழே இறங்கியதுமே மஹிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமன் மிஸ்ராவிடம், "உங்க வண்டி விபத்துக்குள்ளாக்கவில்லை. நல்லாவே இருக்கு.. டோன்ட் வொர்ரி" என்று கிண்டலாக சொன்னேன்.. அந்த அளவுக்கு ஆட்டோ ஸ்மூத்தாகவும், அமைதியாகவும், ஓட்டுவதற்கு எளிதாகவும் இருக்கிறது" என்றார்.. உடனே அருகிலிருந்த கேட் மிடில்டன், ஆட்டோ பயணம், நல்ல வசதியாகவே இருந்தது என்று திருப்தி தெரிவித்தார்.

ஆட்டோவின் ஸ்பெஷாலிட்டிகள்

மஹிந்திரா UDO என்ற இந்த ஆட்டோவை விமானத்தின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.. இதனால் இதை "ஆட்டோபிளேன்" என்றும் நிறுவனம் அழைக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கி.மீ. செல்லும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 55 கி.மீ. வேகம் செல்லுமாம்.

வில்லியம் ஆட்டோ ஓட்டிய போட்டோவை ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா, "ஒரு இளவரசர், ஒரு இளவரசி, ஒரு பறக்கும் இயந்திரம். மஹிந்திரா UDO இருக்கும்போது பறக்க இறக்கைகள் எதற்கு?" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்..

மஹிந்திராவுக்கு கிடைத்த சர்வதேச விருது

இந்த ஆட்டோவை தயாரித்த மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி நிறுவனத்துக்கு 2026-ம் ஆண்டுக்கான Earthshot Prize விருது Clean Our Air பிரிவில் கிடைத்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த முயற்சிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக உலகம் முழுவதுமிருந்து சுமார் 7,000 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 15 நிறுவனங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகின. 5 பிரிவுகளில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் பவுண்ட் பரிசு வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய தம்பதி

மும்பை பயணத்தின்போது வில்லியமும் கேட்டும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடினார்கள். சிறுமிகளுடன் சேர்ந்து ஜாலியாக விளையாடினார்கள்.. பிறகு மும்பை மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்தனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.

இதையடுத்து டெல்லி செல்லும் 2 பேரும் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தயாரான ஒரு சாதாரண ஆட்டோவை பிரிட்டன் இளவரசர் ஓட்டியதும், அதே நிறுவனத்துக்கு சர்வதேச விருது கிடைத்ததும் இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாக அமைந்துள்ளன..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+