Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விவாகரத்து".. அதுவும் திருமணமான 24 மணிநேரத்தில்.. 2 வருட காதல் கசந்தது எப்படி? ஷாக் காரணம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: டாக்டராக இருக்கும் இளம்பெண்ணும், கப்பலில் பணியாற்றும் இன்ஜினியரும் 2 ஆண்டு காதலித்து திருமணம் செய்த பிறகு அடுத்த 24 மணிநேரத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றுள்ளனர். 2 ஆண்டு காதல் திருமணமான 24 மணிநேரத்திலேயே முறிந்தது எப்படி என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம்.. நம் நாட்டை பொறுத்தவரை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வாக உள்ளது. ஒரு காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான் அதிகம் இருந்தன. ஆனால் தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

pune-couple-separate-24-hours-after-the-marriage-with-2-years-of-love-and-now-divorce
Photo Credit:

அதேபோல் முன்காலத்தில் விவாகரத்து என்பது குறைவாக இருந்தது. கணவனை, மனைவியும், மனைவியை கணவனும் அனுசரித்து சென்றனர். ஆனால் இப்போது விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. விவாகரத்துக்கு காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் என்ற விதிவிலக்கு இல்லை. இருதிருமணங்களிலும் விவாகரத்துகள் நடந்து வருகின்றன.

இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடு தான். இதற்கு முன்பு கூட சில மாதங்களுக்கு பிறகு விவாகரத்து கோரி வந்த தம்பதிகள் தற்போது சில நாட்களிலேயே பிரிந்து சென்று விவாகரத்து கேட்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவ இளைஞர் இன்ஜினியராக கப்பலில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், டாக்டராக இருக்கும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இருவவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக வெளியே சென்று வந்தனர்.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் திருமணம் கொண்டாட்டம் முடிவதற்கு முன்பாகவே அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அதாவது திருமணம் முடிந்த 24 மணிநேரத்தில் அந்த தம்பதி பிரிந்துவிட்டனர். 2 ஆண்டு காதலித்து திருமணம் செய்த அவர்களின் இல்லற வாழ்க்கை 24 மணிநேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் விவாகரத்து கோரிய நிலையில் நீதிமன்றம் விவாகரத்தும் வழங்கி உள்ளது.

இந்த வழக்கு பற்றி வழக்கறிஞர் ராணி கூறுகையில், ‛‛விவாகரத்து கோரிய தம்பதி 2-3 ஆண்டுகளாக பழகி வந்தனர். ஒருவரையொருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமானவுடனே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரின் வாழ்க்கை சூழல் தொடர்பாக தான் கருத்து வேறுபாடு இருந்தது. இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துக்கு அவர்களால் வர முடியவில்லை.

மேலும் கணவன் - மனைவி இடையே சித்தாந்த ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருந்தது. இதனால் அவர்கள் சற்றும் யோசிக்காமல் பிரிய முடிவு செய்தனர். இந்த வழக்கில் வன்முறை அல்லது குற்றம் என்பது போல் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. இருவருமே அமைதியான முறையில் சட்டப்படி பிரிந்துள்ளனர்.

பொதுவாம் நம் நாட்டில் விவாகரத்து வழக்குகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு காலம் எடுக்கும். ஆனால் இந்த வழக்கு விரைவில் முடித்து வைக்கப்பட்டது. இருவரும் திருமணமான உடனேயே தனித்தனியாக வாழ்ந்ததால் சீக்கிரமாக விவாகரத்து வழங்கப்பட்டது.

விவாகரத்து வழக்கின்போது கணவர் கப்பலில் வேலை செய்வதாகவும்எப்போது, எங்கு பணியமர்த்தப்படுவர் என்பது தெரியாத நிலை உள்ளது. மேலும் எவ்வளவு நாட்கள் தன்னை விட்டு பிரிந்து இருப்பார் என்பது தெரியாது என்று மனைவி தரப்பில் கூறப்பட்டது. பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரியதால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+